ஆப்நகரம்

அட்சய திருதியை.. தங்கம் விலையை சமாளிக்க மக்கள் செய்த ட்ரிக்ஸ்!

அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலையை சமாளிக்க மக்கள் கடைப்பிடிக்கும் வழிமுறை.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 21 Apr 2023, 4:20 pm
நாளை அட்சய திருதியை பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. அட்சய திருதியை என்றால் தங்கம், வெள்ளி, நாணயங்கள், பாத்திரங்கள் போன்றவற்றை மக்கள் வாங்குவது வழக்கம். இதுபோக அரிசி, கோதுமை போன்ற உணவு தானியங்களையும் வாங்குவார்கள்.
Samayam Tamil gold
gold


இருப்பினும், அட்சய திருதியை என்றாலே தங்கம்தான் நினைவுக்கு வரும். ஏனெனில், அட்சய திருதியை அன்று தங்கத்தை மட்டுமே மக்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர். எனினும், இந்தாண்டு ஒரு புதிய டிரெண்ட் உருவாகியுள்ளதாக நகைக் கடைக்காரர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக அட்சய திருதியை என்றால் மக்கள் நகை கடைக்கு வந்து அவரவர் நிதி நிலைக்கு ஏற்ப தங்கத்தை வாங்கி செல்வார்கள். குறிப்பாக அட்சய திருதியை முகூர்த்த நேரத்தில் அதிகளவில் மக்கள் கூட்டம் நகை கடைகளில் திரளும்.

ஆனால் இந்த ஆண்டு மக்கள் பழைய நகைகளை கொண்டுவந்து கொடுத்துவிட்டு புதிய நகைகளை வாங்கி செல்வதாக நகை வியாபாரிகள் கூறுகின்றனர். இதனால் தற்போது நிறைய பழைய நகைகள் வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றனர்.

மக்கள் பழைய நகைகளை கொடுத்துவிட்டு புதிய நகைகளை வாங்குவதற்கு முக்கிய காரணம் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுதான். அணையில் தங்கம் விலை கடகடவென உயர்ந்துவிட்டது. சர்வதேச பொருளாதார சூழல், வங்கி துறையில் ஏற்பட்ட நெருக்கடி போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

சென்னையில் இன்று 22 கேரட் தங்கம் ஒரு சவரன் 45,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் அட்சய திருதியைக்கு நகை வாங்குவதற்காக பழைய நகைகளை கொடுத்துவிட்டு புதிய நகைகளை முன்பதிவு செய்து வருகின்றனர் வாடிக்கையாளர்கள்.

இதுமட்டுமல்லாமல், பழைய நகைகள் பழைய டிசைன் என்பதால், தற்போது லேட்டஸ்டாக புதிய டிசைன்களில் நகைகளை மாற்றிக்கொள்வதற்காகவும் வாடிக்கையாளர்கள் பழைய நகைகளை விற்பனை செய்து வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்