ஆப்நகரம்

கொரோனாவால் ஏடிஎம்களுக்கு நடையாய் நடக்கும் மக்கள்!

கொரோனா பிரச்சினை வந்தபிறகு ஏடிஎம்களில் அதிகப் பணத்தை மக்கள் எடுப்பது தெரியவந்துள்ளது.

Samayam Tamil 17 May 2021, 8:15 pm
கொரோனா வந்த பிறகு மக்களின் பணப் பரிவர்த்தனை முறை முற்றிலும் மாறிவிட்டது. கொரோனா பரவல் அச்சத்தால் வங்கிகளுக்கு அடிக்கடி சென்று வருவதைத் தவிர்ப்பதற்காகப் பணத்தை மொத்தமாக எடுத்து வைக்கின்றனர். ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி போன்றவற்றால் மக்கள் வங்கிக்குச் செல்வதையும், பணம் எடுக்க ஏடிஎம்களைப் பயன்படுத்துவதையும் முடிந்த வரையில் தவிர்க்கின்றனர். கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் தற்போது தீவிரமாக உள்ளது. எனவே அவசரகால பயன்பாட்டிற்காக ஏடிஎம்களில் இருந்து அதிகமான பணத்தை எடுத்து கையிருப்பில் வைக்கின்றனர்.
Samayam Tamil ATM


மக்கள் முடிந்த வரையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளையே மேற்கொள்கின்றனர். கொரோனா வந்த பிறகு ஏடிஎம்கள் மூலம் பணத்தை வித்டிரா செய்வது 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக சர்வதாரா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான மண்டர் அகாஷே தெரிவித்துள்ளார். மருந்து மற்றும் பிற அவசரத் தேவைகளுக்காகவே பெரும்பாலானோர் பணத்தை எடுத்து வைப்பதாகத் தெரிகிறது. முன்பெல்லாம் மக்கள் சராசரியாக ஒரு நேரத்தில் 2,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை மட்டுமே ஏடிஎம்மில் வித்டிரா செய்வார்கள். ஆனால் இப்போது 3,000 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை எடுக்கின்றனர்.

ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 கிடைக்கும்... அசத்தல் திட்டம்!!

பணம் தொடர்பா மக்களின் இந்த அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக, ஐ.எம்.பி.எஸ் மூலம் மேற்கொள்ளும் பணப் பரிவர்த்தனை மதிப்பு 9,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்னர் இதன் அளவு 6,000 ரூபாய் முதல் 7,000 ரூபாய் வரை மட்டுமே இருந்தது. கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியர்களின் பணம் சார்ந்த நிர்வாகத்தைப் பாதித்துள்ளது. நீண்ட கால அடிப்படையில் மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளையே இனி அதிகமாக மேற்கொள்வார்கள் என்று அகாஷே கூறுகிறார்.

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, மே 7ஆம் தேதி புழக்கத்தில் இருந்த ரூபாயின் மதிப்பு ரூ.2,939,997 கோடியாக இருந்தது. இது மார்ச் 28ஆம் தேதியில் 2,858,640 கோடியாக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்