ஆப்நகரம்

இன்று தமிழகத்திற்கு கிடைத்த இரண்டாவது வெற்றி

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் எதிரொலியாக இன்று தமிழகம் முழுவதும் பெப்சி, கோக் குளிர்பானங்கள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

TNN 1 Mar 2017, 10:46 am
சென்னை : ஜல்லிக்கட்டு போராட்டத்தின் எதிரொலியாக இன்று தமிழகம் முழுவதும் பெப்சி, கோக் குளிர்பானங்கள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil pepsi and coke will not sale today
இன்று தமிழகத்திற்கு கிடைத்த இரண்டாவது வெற்றி


ஜல்லிக்கட்டு போராட்டத்தில், பீட்டாவை தடை செய், ஜல்லிக்கட்டு வேண்டும் என பொதுமக்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தில் வெளிநாட்டு குளிர்பானங்கள் தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றின் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் இயற்றப்பட்டு முதல் வெற்றியை போராட்டத்தின் மூலம் தமிழகம் அடைந்தது. அதன் தொடர்ச்சியாக வெளிநாட்டு குளிர்பானங்கள் மார்ச் 1 முதல் விற்க மாட்டோம் என வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்தார்.



இதனால் இன்று முதல் தமிழகம் முழுவதும் வெளி நாட்டு குளிர்பானங்கள் விற்பனை தடுத்து இரண்டாவது வெற்றி பெற்றுள்ளோம். இந்த வெற்றியை அப்படியே விட்டு விடாமல் அதை ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மாபெரும் போராட்டத்தில் இறங்க வேண்டும் என வணிகர் சங்கம் கேட்டுள்ளது.

தமிழ் பாரம்பரியத்தை மீட்டெடுத்த தமிழர்கள், தமிழ் நாட்டை மீட்டெடுக்கும் நிலை உருவானால், எதற்கும் தயங்காமல் எதிர்த்து போராடுவார்கள் என்பது தான் உண்மை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்