ஆப்நகரம்

இந்திய தண்ணீரை விற்று ரூ. 195 கோடி சம்பளம் பெறும் பெப்சி சி.இ.ஓ.

இந்தியாவுக்கான பெப்சி கோ சி.இ.ஓ.,வாக பணியாற்றி வரும் இந்திரா நூயிக்கு வருடத்திற்கு 195 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது.

TNN 19 Mar 2017, 4:24 pm
இந்தியாவுக்கான பெப்சி கோ சி.இ.ஓ.,வாக பணியாற்றி வரும் இந்திரா நூயிக்கு வருடத்திற்கு 195 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது.
Samayam Tamil pepsico ceo indra nooyis pay rises to 195 crore in a year
இந்திய தண்ணீரை விற்று ரூ. 195 கோடி சம்பளம் பெறும் பெப்சி சி.இ.ஓ.


இந்தியாவுக்கான பெப்சி கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சென்னையை சேர்ந்த இந்திரா நூயி கடந்த 2006ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றார்.

இவருக்கு கடந்த ஆண்டு சம்பளமாக 29.8 மில்லியன் டாலர் (ரூ. 195 கோடி) வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு கடந்த ஆண்டு சம்பளத்தில் 13% அதிகரித்து வழங்கப்பட்டுள்ளது. பெப்சியின் பல்வேறு புது பொருட்களால் இவருக்கு கடந்த 4 வருடங்களாக சம்பளத்தில் உயர்வு செய்து வழங்கப்பட்டு வருகின்றதாம்.

தமிழகத்தில் தாமிரபரணியில் பெப்சி, கோக் நிறுவனங்கள் தண்ணீர் எடுக்கக் கூடாது என தடைவிதிக்கபட்ட போது, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் இந்திரா நூயி. இதன் பின் வெளியான உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பில், தாமிரபரணியின் உபரி நீரை தான் எடுப்பதாகவும், அவர்கள் தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக தீர்ப்பு வெளியானது.

இந்த வகையில், இந்தியா தண்ணீரை, குறிப்பாக தமிழக தாமிரபரணி தண்ணீரை விற்கும் பெப்சி நிறுவன தலைவர் இந்திரா நூயிக்கு சம்பளம் மட்டும் ரூ. 195 கோடி வழங்கப்படுகிறது. அப்படி என்றால், பெப்சி நிறுவன ஒட்டுமொத்த விற்பனை மிக அதிகமாக தான் இருக்கும். இந்த செய்தி தண்ணீர் இன்றி தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் உயிருக்கு மதிப்பில்லாத நிலையையே காட்டுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்