ஆப்நகரம்

LIC பாலிசியில் லோன் வாங்கலாம்... வட்டி ரொம்ப கம்மி!

பெர்சனல் லோன் வாங்க நினைப்பவர்கள் மிகக் குறைந்த வட்டியில் எல்.ஐ.சி. பாலிசி மூலமாகவே வாங்கலாம்.

Samayam Tamil 9 Dec 2021, 10:11 am
இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி.) தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அவற்றுள் மிக முக்கியமான ஒன்றுதான் எல்.ஐ.சி. பெர்சனல் லோன். தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளில் உள்ள வட்டியை விட இதில் வட்டி மிகவும் குறைவுதான். 9 சதவீதம் தொடங்கி நீங்கள் கடன் வாங்கலாம். திருப்பிச் செலுத்தும் கால அளவும் குறைவாக இருக்கும். அதற்கு ஏற்ப ஈ.எம்.ஐ. செலுத்தினால் போதும்.
Samayam Tamil lic


எல்.ஐ.சி. பாலிசிதாரர்கள் அனைவருக்குமே இதில் கடன் கிடைக்கும். அவர்களின் வருமானத்தைப் பொறுத்து கடன் பெறும் வசதி இருக்கும். 5 ஆண்டு கால கடனுக்கு வட்டி 9 சதவீதம் முதல் தொடங்குகிறது. உங்களது பாலிசி சரண்டர் மதிப்பில் சுமார் 90 சதவீதம் வரையில் நீங்கள் கடனாகப் பெற முடியும். உங்களுடைய பாலிசி சரண்டர் மதிப்பு ரூ.5 லட்சமாக இருந்தால் நீங்கள் ரூ.4.5 லட்சம் வரையில் கடன் பெறமுடியும். கடன் வரம்பு காலத்துக்கு முன்னரே நீங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் வசதியும் உள்ளது. அவ்வாறு செலுத்தினால் கூடுதல் கட்டணங்களைத் தவிர்க்கலாம்.

ஒரே பாலிசி... ஓகோனு வாழ்க்கை! ரூ.28 லட்சம் சம்பாதிக்கலாம்!
நீங்கள் ஒரு ஆண்டு காலத்துக்கு ரூ.1 லட்சம் கடன் வாங்கியிருந்தால் 9 சதவீத வட்டியில் ரூ.8,745 ஈ.எம்.ஐ. செலுத்த வேண்டியிருக்கும். இதே கடனை இரண்டு ஆண்டுகளில் அடைக்க வேண்டியதாக இருந்தால் நீங்கள் ஈ.எம்.ஐ.ஆக ரூ.4,568 செலுத்த வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு ரூ.3,180, நான்கு ஆண்டுகளுக்கு ரூ.2,489 மற்றும் 5 ஆண்டுகளுக்கு ரூ.2,076 ஈ.எம்.ஐ. செலுத்த வேண்டியிருக்கும்.

அதேபோல, நீங்கள் ரூ.5 லட்சம் கடன் வாங்கினால் கீழ்க்கண்டவாறு ஈ.எம்.ஐ. செலுத்தலாம்.

1 வருடம் - ரூ.44,191
2 வருடம் - ரூ.23,304
3 வருடம் - ரூ.18,472
4 வருடம் - ரூ.15,000
5 வருடம் - ரூ.12,917

எல்.ஐ.சி. வெப்சைட்டிலேயே நீங்கள் பெர்சனல் லோனுக்கு விண்ணப்பிக்க முடியும். அதிலேயே விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்தபின்னர் கையொப்பமிட்டு அதை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டியிருக்கும். உங்களது விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு தேவையான தொகை உங்களுடைய வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்