ஆப்நகரம்

வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி; குறைந்தது பெட்ரோல், டீசல் விலை!

பெட்ரோல், டீசல் விலை இன்றைய நிலவரப்படி சற்று குறைந்துள்ளது.

TNN 12 Oct 2017, 6:39 am
சென்னை: பெட்ரோல், டீசல் விலை இன்றைய நிலவரப்படி சற்று குறைந்துள்ளது.
Samayam Tamil petrol diesel price announced today
வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி; குறைந்தது பெட்ரோல், டீசல் விலை!


எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த ஜூன் மாதம் கைவிடப்பட்டது.

இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை தொடர்ச்சியாக வருவதால், பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில் பெட்ரோலின் விலை 3 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.70.93ஆகவும், டீசலின் விலை 2 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.60.02ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

Petrol, Diesel price announced today.

அடுத்த செய்தி

டிரெண்டிங்