ஆப்நகரம்

மறுபடியும் உச்சம் தொட்ட பெட்ரோல், டீசல் விலை

கடந்த ஒரு வாரத்தில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Samayam Tamil 20 May 2018, 12:30 pm
கடந்த ஒரு வாரத்தில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
Samayam Tamil fuel-price-UK-petrol-diesel-cars-891888


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள மே 20ஆம் தேதிக்கான (இன்று) பெட்ரோல், டீசல் விலை கடந்த 2013ஆம் ஆண்டு இருந்த உச்ச விலையை விட அதிகமாகியுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 76.24 ரூபாய் ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு 67.57 ரூபாய் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது டெல்லியில் உள்ள விலை நிலவரம். டெல்லியில்தான் இருப்பதிலேயே குறைவான விலையில் பெட்ரோல், டீசல் விற்கப்படுகிறது. மற்ற மெட்ரோ நகரங்களிலும் மாநிலங்களின் தலைநகர்களிலும் இந்த விலையிலிருந்து சிறு மாறுதல்கள் இருக்கும்.

இதன்படி பெட்ரோல் டீசல் விலை கடந்த செப்டம்பர் 14, 2013ல் இருந்த அதிகபட்ச விலையைத் தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அப்போது 76.06 ரூபாயாக இருந்த பெட்ரோலின் விலை இன்று ரூ.76.24 ஆக உள்ளது.

கடந்த மே14ஆம் தேதியிலிருந்து பெட்ரோல் விலை ரூ.1.61 உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலையும் ரூ.1.64 உயர்வு கண்டுள்ளது. முன்னதாக கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பெட்ரோல் டீசல் விலையில் தினசரி மாற்றம் இல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்