ஆப்நகரம்

பெட்ரோல் விலை: உடனே கிளம்புங்க விலை சரிந்தது...

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 74. 75 காசுகளுக்கு விற்கப்படுகிறது...

Samayam Tamil 29 Feb 2020, 8:45 am
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. அதேசமயம் சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது.
Samayam Tamil full


இம்முறை சுமார் 15 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதற்கான பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த முறையில் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டு வருகிறது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவிடுகிறது.

12.67 லட்சம் பேருக்கு வேலை கிடைச்சிருக்காம்!

அந்த வகையில் சென்னையில் இன்றைய நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். பெட்ரோல் விலை கடந்த சில நாள்களாக பெரியளவில் எந்தவித மாற்றமுமில்லாமல் உள்ளது. சென்னையில் இன்றைய பெட்ரோல் ஒரு லிட்டர் விலையை பொறுத்தவரை ரூ. 74. 68 காசுகளுக்கு விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட 7 காசுகள் குறைவு.

அதேபோல் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.68. 21 காசுகளுக்கு விற்கப்படுகிறது. இதன்படி, டீசல் ஒரு லிட்டர் நேற்றைய விலையைவிட 9 காசுகள் அதிகமாகும்.

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை சிறிதளவு மட்டும் குறைந்திருப்பது வாகன ஓட்டிகளிடையே சற்றே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்