ஆப்நகரம்

விண்ணை முட்டிய பெட்ரோல் விலை: திணறும் வாகன ஓட்டிகள்!

இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.

Samayam Tamil 5 Dec 2020, 4:00 pm

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 86 ரூபாயாக உயர்ந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 78.69 ரூபாயாக உயர்ந்துள்ளது.
Samayam Tamil Petrol


டெல்லியில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 83 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலையேற்றமாகும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 27 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 25 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

பணம் விஷயத்தில் 2020 நமக்கு கற்றுத்தந்த பாடங்கள்!

இதன்படி, டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 83.13 ரூபாயாக உயர்ந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 73.32 ரூபாயாக உயர்ந்துள்ளது. 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு இன்று பெட்ரோல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு நவம்பர் 20ஆம் தேதி முதல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றி வருகின்றன. அதன்பிறகு தற்போது 13ஆவது முறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 16 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.07 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 2.86 ரூபாயும் உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பூசி வெளியாகவுள்ளதாக நம்பிக்கை பிறந்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாக ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்