ஆப்நகரம்

எங்களுக்கு பெட்ரோலே வேணாம்.. ஓரமா போன வாகன ஓட்டிகள்.. கடகடவென சரிந்த விற்பனை!

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள சூழலில் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது.

Samayam Tamil 16 Apr 2022, 6:18 pm
உக்ரைன் - ரஷ்யா இடையே பிப்ரவரி மாதம் போர் தொடங்கிய பின் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தது. இதனால் உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தது. ஆனால், அதிசயமாக இந்தியாவில் விலை உயரவில்லை.
Samayam Tamil petrol


உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து வந்த சூழலில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமலேயே இருந்தது. பின்னர் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது.

மார்ச் 22ஆம் தேதி முதல் தொடர் உயர்வுக்கு பின் ஏப்ரல் 6ஆம் தேதியுடன் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவது நின்றது. ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு சுமார் 10 ரூபாய் உயர்ந்துவிட்டது. ஏற்கெனவே பணவீக்கம், விலைவாசி உயர்வுக்கு மத்தியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியது.

மல்லுக்கட்டும் மல்லி.. பூக்களின் விலை உயர்வு!
இதுமட்டுமல்லாமல் கேஸ் சிலிண்டர் விலையும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ள சூழலில் ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது.

ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியில் மட்டும் பெட்ரோல் விற்பனை சுமார் 10% சரிந்துள்ளது. மேலும், டீசல் விற்பனை சுமார் 15.6% சரிந்துள்ளது. விலை உயர்வுக்கு பின் பெட்ரோல், டீசல் நுகர்வு குறைந்துள்ளதையே இது காட்டுகிறது.

மேலும், எலெக்ட்ரிக் வாகனங்கள் உள்ளிட்ட மாற்று வழிகளுக்கு வாகன ஓட்டிகள் நகர்ந்து வருவதால் பெட்ரோல், டீசல் விற்பனை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்