ஆப்நகரம்

அரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு.. ஓய்வூதிய திட்டத்தில் கட்டுப்பாடு!

​ஜூன் 30ஆம் தேதிக்குள் ஆதார் - பான் இணைக்காவிட்டால் ஓய்வூதிய கணக்கில் கட்டுப்பாடு.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 11 May 2023, 5:52 pm
அரசு ஊழியர்கள் உள்ளிட்ட தேசிய ஓய்வூதிய திட்டத்தின் (NPS) பயனாளிகள் ஜூன் 30ஆம் தேதிக்குள் ஆதார் - பான் கார்டுகளை இணைக்க வேண்டும் எனவும், அப்படி இணைக்க தவறினால் ஓய்வூதிய கணக்கில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA எச்சரித்துள்ளது.
Samayam Tamil pfrda asks nps subscribers to link aadhaar pan cards by june 30th 2023 to avoind non compliance and restrictions
அரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு.. ஓய்வூதிய திட்டத்தில் கட்டுப்பாடு!


​தேசிய ஓய்வூதிய திட்டம்​

அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தேசிய ஓய்வூதிய திட்டம் அமலில் இருக்கிறது. இதில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அனைவருமே அடங்குவர். இதுபோக தனியார் துறை ஊழியர்களும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்வதற்கு அனுமதிக்கப்படுகிறது.

​ஆதார் - பான் இணைப்பு​

இந்திய குடிமக்கள் அனைவருமே ஆதார் - பான் கட்டாயமாக இணைக்க வேண்டும் என இந்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. அவ்வகையில், தேசிய ஓய்வூதிய திட்டத்தின் உறுப்பினர்களும் ஆதார் -பான் இணைக்க வேண்டும் என பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA உத்தரவிட்டுள்ளது.

​கடைசி தேதி நீட்டிப்பு​

ஆதார் - பான் கார்டுகளை இணைப்பதற்கான கடைசி தேதியை வரும் ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது மத்திய அரசு. எனினும், ஆதார் - பான் கார்டுகளை இணைக்க 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

​பென்சன் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு​

இந்நிலையில், தேசிய ஓய்வூதிய திட்டத்தின் உறுப்பினர்கள் வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் ஆதார் - பான் கார்டுகளை கட்டாயமாக இணைக்க வேண்டும் என பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது.

​ஆதார் - பான் இணைக்க தவறினால்​

தேசிய ஓய்வூதிய திட்டத்தின் உறுப்பினர்கள் வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் ஆதார் - பான் இணைக்கவில்லை எனில் அது விதிமீறலாக கருதப்பட்டு ஓய்வூதிய கணக்கு பரிவர்த்தனைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் PFRDA எச்சரித்துள்ளது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்