ஆப்நகரம்

Pallonji Mistry: காலமானார் பல்லோன்ஜி மிஸ்ட்ரி.. டாடா குழுமத்தில் கிங்மேக்கர் டூ பெரும் பணக்காரர்.. யார் இவர்?

பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் பெரும் பங்குதாரராக இருந்தவருமான பல்லோன்ஜி மிஸ்ட்ரி இன்று காலமானார்.

Samayam Tamil 28 Jun 2022, 11:54 am
ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் தலைவரும், தொழிலதிபருமான பல்லோன்ஜி மிஸ்ட்ரி இன்று அதிகாலையில் காலமானார். அவருக்கு வயது 93. ஷபூர்ஜி பல்லோன்ஜி நிறுவனத்தின் தலைவராக இருந்தாலும், டாடா குழுமத்தின் மிகப்பெரிய பங்குதாரராகவே பல்லோன்ஜி மிஸ்ட்ரி அறியப்படுகிறார்.
Samayam Tamil Pallonji Mistry


டாடா குழுமத்தில் பல்லோன்ஜி மிஸ்ட்ரிக்கு 18.37% பங்கு இருந்தது. இதன்படி டாடா குழுமத்தின் மிகப்பெரிய பங்குதாரரும் அவரே. டாடா குழுமத்தின் தலைமை அலுவலகமான பாம்பே ஹவுஸில் செல்வாக்கு படைத்தவராக பல்லோன்ஜி அறியப்படுகிறார்.

டாடா நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்ததால் பல்லோன்ஜி மிஸ்ட்ரியின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. அயர்லாந்து குடியுரிமை கொண்டவர் என்பதால் பல்லோன்ஜி மிஸ்ட்ரி அயர்லாந்தி நாட்டின் மிகப்பெரிய பணக்காரராகவும் அறியப்படுகிறார்.

12 கிலோ தங்க நாணயம்.. 35 ஆண்டுகளுக்கு பின் தேடுதல் வேட்டையில் மத்திய அரசு!
பல்லோன்ஜி மிஸ்ட்ரியின் மகன் சைரஸ் மிஸ்ட்ரி 2011ஆம் ஆண்டில் டாடா குழுமத்தின் தலைவரானார். பின்னர் 2016ஆம் ஆண்டில் சைரஸ் மிஸ்ட்ரி தலைமை பொறுப்பில் இருந்து வெளியேற்றப்பட்டதால் மிஸ்ட்ரி குடும்பத்துக்கும், டாடா குடும்பத்துக்கும் இடையே மோதல் போக்கு உருவானது.

பல்லோன்ஜி மிஸ்ட்ரியின் நிறுவனமான ஷபூர்ஜி பல்லோன்ஜி பல்வேறு பிரபலமான கட்டிடங்களை கட்டமைத்த நிறுவனமாகும். மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகம், மும்பை தாஜ் ஹோட்டல், ஓபராய் ஹோட்டல் உள்ளிட்ட கட்டிடங்களை ஷபூர்ஜி பல்லோன்ஜி நிறுவனம் கட்டமைத்துள்ளது. ஓமான் சுல்தானுக்கு அரண்மனையும் கட்டியது ஷபூர்ஜி பல்லோன்ஜி நிறுவனம்தான்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்