ஆப்நகரம்

SBI வாடிக்கையாளர்கள் பணத்தை குறிவைக்கும் மோசடி கும்பல்.. சிக்காமல் இருக்க இதை பண்ணுங்க!

எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் பணத்தை குறிவைக்கும் மோசடி கும்பல் குறித்து எச்சரிக்கை.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 20 Feb 2023, 11:11 am
உலகம் வேக வேகமாக டிஜிட்டல்மயமாகி வருகிறது. இதன் தாக்கமாக பணப் பரிவர்த்தனை முறைகளும் நவீனமயமாகிவிட்டன. இந்தியாவில் ஏராளமானோர் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பயன்படுத்தி பணம் அனுப்பியும், பணம் பெற்றும் வருகின்றனர்.
Samayam Tamil sbi
sbi mobile


எந்த ஒரு வளர்ச்சியும் ஏற்படும்போது அதை தவறாக பயன்படுத்தி, விழிப்புணர்வு இல்லாதவர்களிடம் பணத்தை கொள்ளை அடிக்க மோசடி கும்பல்கள் கிளம்புவது இயல்புதான். அவ்வகையில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை குறிவைத்தும் மோசடி கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவின் மிகப்பெரிய வங்கி எஸ்பிஐ. சுமார் 45 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ வங்கிக்கு இருக்கின்றனர். இந்நிலையில், எஸ்பிஐ வாடிக்கையாளர்களை சில மோசடி கும்பல்கள் தொடர்புகொண்டு, தாங்கள் எஸ்பிஐ வங்கியில் இருந்து அழைப்பதாக பொய் சொல்லி பணத்தை கொள்ளை அடிக்க முயல்கின்றனர்.

இதுகுறித்து, மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, இந்த மோசடி கும்பல்கள் முதலில் எஸ்பிஐ வாடிக்கையாளர்களை தொடர்புகொள்கின்றனர் அல்லது SMS அனுப்புகின்றனர்.

அதில் தாங்கள், எஸ்பிஐ வங்கியில் இருப்பதாக பொய் சொல்கின்றனர். வாடிக்கையாளரின் YONO கணக்கு முடக்கப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் தொடங்குவதற்கு வாடிக்கையாளரின் பான் கார்டு எண் போன்ற விவரங்களை தரும்படி கேட்கின்றனர்.

இதுபோன்ற மோசடி கும்பல்களை நம்ப வேண்டாம் எனவும், அவர்கள் அனுப்பும் Linkஐ கிளிக் செய்ய வேண்டாம் எனவும், உங்களது பான் கார்டு எண் உள்ளிட்ட விவரங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம் எனவும் எஸ்பிஐ வாடிக்கையாளர்கலுக்கும், பொதுமக்களுக்கும் பத்திரிகை தகவல் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மோசடி கும்பல்களிடம் சிக்காமல் இருக்க ரிசர்வ் வங்கியின் வழிகாட்டல்:

1. அடையாளம் தெரியாத, சரிபார்க்கப்படாத Linkகளை கிளிக் செய்ய வேண்டாம். அதுபோன இமெயில் மற்றும் SMS டெலிட் செய்துவிடவும்.

2. வங்கிகள், இ-கார்ஸ் தளங்கள் போன்றவற்றுக்கு Link அனுப்பும் இமெயில்களை டெலிட் செய்யவும். அதற்கு முன் அனுப்புநரின் இமெயில் ஐடியை பிளாக் செய்யவும்.

3. வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் மொபைல் ஆப்களை மட்டும் பயன்படுத்தவும். உங்கள் தனிநபர் விவரங்கள், நிதி விவரங்கள் கேட்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யவும்.

4. உங்களுக்கு வரும் இமெயில்களின் Domain spelling சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்க்கவும். சந்தேகிக்கும்படி இருந்தால் வங்கியை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கவும்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்