ஆப்நகரம்

விவசாயிகளுக்கு அடுத்த 2000 ரூபாய் எப்போது கிடைக்கும்?

பிஎம் கிசான் திட்டத்தில் 10ஆவது தவணைப் பணம் எப்போது கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 7 Oct 2021, 8:23 pm
நாட்டிலுள்ள ஏழை எளிய விவசாயிகளுக்கு உதவுவதற்காக மத்திய மோடி அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) என்ற விவசாய நிதியுதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மூன்று தவணைகளாக 6000 ரூபாய் வழங்கப்படும். ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என, விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கே இந்தப் பணம் அரசு தரப்பிலிருந்து நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இதுவரையில் 9 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த தவணை எப்போது கிடைக்கும் என்று விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Samayam Tamil pm kisan


இந்நிலையில், 10ஆவது தவணைப் பணம் எப்போது கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 15ஆம் தேதி வாக்கில் விவசாயிகளுக்கு 10ஆவது தவணைப் பணம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கான பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த நிதியுதவி விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக டெபாசிட் செய்யப்படும். பிஎம் கிசான் திட்டத்தில் இதுவரையில் விவசாயிகளுக்கு ரூ.1.58 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 11.37 கோடி விவசாயிகள் இந்த நிதியுதவியைப் பெற்றுள்ளனர்.

Gold rate: விலைய கேட்டா நெஞ்சு வலியே வந்திடும்!

இதுவரையில் 9 தவணைப் பணம் வழங்கப்பட்டுவிட்ட நிலையில் இன்னும் பல விவசாயிகள் இத்திட்டத்தில் இணையாமல் உள்ளதாகத் தெரிகிறது. இதுவரை பதிவு செய்யாமல் இருக்கும் விவசாயிகள் pmkisan.gov.in என்ற வெப்சைட்டில் சென்று பதிவு செய்யலாம். இதில் பதிவு செய்வதற்கு ஆதார், மொபைல் நம்பர், வங்கிக் கணக்கு விவரம் போன்றவை முக்கியம். நில ஆவணங்களும் தேவைப்படும். பென்சன் வாங்குவோர், வருமான வரி செலுத்துவோர் உள்ளிட்ட சில பிரிவுகளுக்கு இத்திட்டத்தில் நிதியுதவி பெறத் தகுதியில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்