ஆப்நகரம்

2000 ரூபாய் இன்னும் வரலயா? உடனே செக் பண்ணுங்க!

பிஎம் கிசான் திட்டத்தில் நிதியுதவி இன்னும் வராமல் இருந்தால் அதை செக் பண்ண ஈசி வழி இதோ...

Samayam Tamil 26 Oct 2021, 2:07 pm
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு தவணைக்கு 2,000 ரூபாய் என மொத்தம் மூன்று தவணைகள் ஒவ்வொரு ஆண்டிலும் வழங்கப்படுகின்றன. அதன் 9ஆவது தவணைப் பணம் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்பட்டது. மொத்தம் ரூ.19,500 கோடியை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். ஆனால் இன்னும் பல விவசாயிகளுக்கு இந்த நிதியுதவி வந்துசேரவில்லை என்று கூறப்படுகிறது.
Samayam Tamil pm kisan


தகுதியுடைய விவசாயிகளுக்கு அவர்களுக்கான நிதியுதவி அவர்களின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இதற்கு ஆதார் முக்கியம். சில நேரங்களில் ஆதார் எண், மொபைல் நம்பர், வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்கள் தவறாக வழங்கப்பட்டிருந்தாலும் நிதியுதவி வந்து சேராது. எனவே முதலில் இந்த விவரங்கள் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். எல்லாம் சரியாக இருந்து பணம் வராமல் இருந்தால் பிஎம் கிசான் வெப்சைட்டிலேயே அதை சரிபார்க்க முடியும்.

இதற்காக எங்கும் அலையத் தேவையில்லை. வீட்டில் அமர்ந்தபடியே ஆன்லைன் மூலமாகப் பார்க்கலாம்.

www.pmkisan.gov.in என்ற வெப்சைட்டில் செல்ல வேண்டும்.

ஹோம் பேஜில் உள்ள ’farmers corner’ என்ற வசதியை கிளிக் செய்து அதில் ’beneficiary list’ என்ற வசதியை தேர்ந்தெடுக்கவும்.

உங்களுடைய மாநிலம், மாவட்டம், பிளாக், கிராமம் போன்ற விவரங்களைச் சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

‘get report' கொடுத்து மீண்டும் beneficiary list கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது உங்களது பெயரை சரிபார்த்து confirm கொடுக்க வேண்டும்.

மீண்டும் ஹோம் பேஜுக்குச் சென்று beneficiary status சரிபார்க்க வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்