ஆப்நகரம்

2000 ரூபாய் வருமா வராதா? காத்துக் கிடக்கும் விவசாயிகள்!

பணம் வரும் தேதி இதுதான்!

Samayam Tamil 2 May 2022, 11:31 am
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு எப்போது பணம் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil pm kisan beneficiaries may get 11th installment amount in second week of this month
2000 ரூபாய் வருமா வராதா? காத்துக் கிடக்கும் விவசாயிகள்!


விவசாயிகளுக்கான திட்டம்!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) எனப்படும் பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை 2018ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மத்திய அரசு கொண்டுவந்தது. மூன்று தவணைகளில் தலா ரூ.2,000 என ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே இந்தப் பணம் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.

11ஆவது தவணை!

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டுவிட்டன. 11ஆவது தவணை ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு வழங்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால் ஏப்ரல் மாதமே முடிந்துவிட்ட நிலையில் இன்னும் பணம் வந்துசேரவில்லை. விவசாயிகளுக்கான பிஎம் கிசான் கணக்கில் பணம் வருவதற்கான உறுதித் தகவல் உள்ளது. ஆனாலும் இன்னும் வந்துசேரவில்லை.

பணம் வரும் தேதி!

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, மே 14, 15 ஆகிய தேதிகளில் 11ஆவது தவணை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சென்ற ஆண்டிலும் மே 15ஆம் தேதிதான் பணம் வழங்கப்பட்டது. அதேபோல, இந்த ஆண்டும் மே 15ஆம் தேதி வாக்கில் பணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணம் கிடைக்க வேண்டுமானால் விவசாயிகள் தங்களது கேஒய்சி சரிபார்ப்பை முடித்திருக்க வேண்டும். pmkisan வெப்சைட்டிலேயே அதற்கான வசதி உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்