ஆப்நகரம்

மோடி கொடுக்கும் ரூ.2,000: 9 கோடி விவசாயிகளுக்குப் பணம்!

டிசம்பர் 25ஆம் தேதி 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.2000 நிதியுதவியை பிரதமர் நரேந்திர மோடி வழங்குகிறார்.

Samayam Tamil 23 Dec 2020, 8:09 pm
’பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி’ எனப்படும் பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை 2018ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மத்திய அரசு கொண்டுவந்தது. 2019-20 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை ரூ.2,000 என ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு விரைவாகப் பண உதவி வழங்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil pm modi


இந்த ஆண்டுக்கான நிதியுதவியில், ஏப்ரல் மாதத்தில் முதல் தவணையில் ரூ.2,000 நிதியும், ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாவது தவணையில் ரூ.2,000 நிதியும் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கடைசித் தவணைப் பணம் டிசம்பர் 25ஆம் தேதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிரதமர் மோடி 9 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் நிதியுதவியை வழங்குகிறார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி விவசாயிகளிடையே மோடி உரையாற்றுகிறார்.

மாதம் ரூ.5,000 பென்சன் வேணுமா? இந்தத் திட்டத்தில் சேருங்க!

கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி 8.5 கோடி விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளுக்கு பிரதமரின் விவசாயி நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ.17,000 கோடி செலுத்தப்படும் என்று பிரதமர் அறிவித்தார். அதன்படி, முதல் தவணையாக ஏப்ரல் மாதத்திலேயே விவசாயிகளுக்கு ரூ.2,000 வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் நிதியுதவி பெறுவதற்கு உங்களது பெயர் இணைக்கப்பட்டுள்ளதா என்று தெரிந்துகொள்வதற்கு pmkisan.gov.in இணையதளத்தில் சென்று பார்க்கலாம். இத்திட்டத்தில் பயன்பெற்ற விவசாயிகளின் பெயர் பட்டியலை மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதைப் பார்ப்பதற்கு pmkisan.gov.in இணையதளத்தில் செல்ல வேண்டும்.

மெனு பாரில் உள்ள farmers corner என்ற வசதியை கிளிக் செய்து அதில் 'beneficiary list' என்பதில் உள்நுழைய வேண்டும்.

உங்களது மாநிலம், மாவட்டம், பிரிவு, கிராமத்தின் பெயர் போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டும்.

பின்னர் 'Get information' என்பதை கிளிக் செய்து பார்த்தால் இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளின் பெயர் விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்