ஆப்நகரம்

MSME நிறுவனங்களுக்கு புதிய திட்டம்.. பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி புதிய திட்டத்தை இன்று தொடங்கிவைத்தார்.

Samayam Tamil 30 Jun 2022, 4:29 pm
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்காக 'Raising and Accelerating MSME Performance' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் மொத்த மதிப்பு 6062.45 கோடி ரூபாய்.
Samayam Tamil PM Modi


சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் திறனையும், தொழிலையும் விரிவுபடுத்தி மேம்படுத்துவதே இத்திட்டத்தின் இலக்கு. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்காக ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் திட்டங்களையும் இத்திட்டம் வலுப்படுத்தும்.

இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, “சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் தூணாக இருக்கின்றன. இந்தியாவின் மொத்த பொருளாதாரத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மூன்றில் ஒரு பங்கு உள்ளது.

Andrew formica: பீச்சுக்கு போய் சும்மா உக்கார போறேன்.. CEO பதவியை ராஜினாமா செய்தவர் முடிவு!
இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை வலுவாக இருக்க வேண்டியதும், அவர்களின் தயாரிப்புகள் புதிய சந்தைகளுக்கு செல்ல வேண்டியதும் முக்கியம். இத்துறையின் திறனை கருத்தில் கொண்டு அரசு புதிய முடிவுகளை எடுத்து, புதிய கொள்கைகளை உருவாக்கி வருகிறது.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறையை பலப்படுத்துவதற்காக கடந்த எட்டு ஆண்டுகளில் பட்ஜெட் 650% உயர்த்தப்பட்டுள்ளது. காதி துறையின் விற்றுமுதல் 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இதற்கு கிராமங்களை சேர்ந்த சகோதரிகளும், சிறு தொழில் முனைவோருமே காரணம். எட்டு ஆண்டுகளில் காதி பொருட்களின் விற்பனை 4 மடங்கு உயர்ந்துள்ளது” என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்