ஆப்நகரம்

செக் விதிமுறைகள் மாற்றம்.. புது ரூல்ஸ் இதுதான்!

செக் கிளியரன்ஸ் விதிமுறைகளை மாற்றியுள்ளது பஞ்சாப் நேஷனல் வங்கி.

Samayam Tamil 2 Mar 2022, 2:45 pm
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank) செக் (காசோலை) கிளியரன்ஸ் தொடர்பான விதிமுறைகளை மாற்றியுள்ளது. இதன்படி, 10 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் மதிப்பு கொண்ட காசோலைகள், வாடிக்கையாளரிடம் உறுதிசெய்யப்பட்ட பிறகே கிளியராகும்.
Samayam Tamil காசோலை


ஏற்கெனவே 50,000 ரூபாய்க்கு மேற்பட்ட செக் கிளியர் செய்வதற்கு வாடிக்கையாளரிடம் உறுதிசெய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி விதிமுறை வகுத்துள்ளது. எனினு, இது வாடிக்கையாளரின் விருப்பத்துக்கு ஏற்ப மட்டுமே செயல்படுத்தப்படும்.

5 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட செக் கிளியர் செய்வதற்கு வங்கிகள் விருப்பப்பட்டால் கட்டாயமாக்கிக்கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. இந்நிலையில், 10 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட செக் கிளியர் செய்வதற்கு வாடிக்கையாளர் உறுதிசெய்ய வேண்டியது கட்டாயம் என பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு கடைசி வாய்ப்பு.. உடனே இதை வாங்கிடுங்க!
இதன்படி, செக் கிளியரன்ஸ் ஆவதற்கு வாடிக்கையாளர் தனது அக்கவுண்ட் நம்பர், செக் நம்பர், செக் ஆல்ஃபா கோடு, செக் வழங்கப்பட்ட தேதி, தொகை, பயனாளியின் பெயர் உள்ளிட்ட விவரங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும்.

கிளியரன்ஸுக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாகவே தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டிருக்க வேண்டும். நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மூலமாகவும், நேரடியாக வங்கிக் கிளைக்கு சென்றும் தகவல்களை சமர்ப்பிக்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்