ஆப்நகரம்

ஆயுத பூஜை கொண்டாட்டம்.. பூஜை பொருட்கள் விற்பனை அமோகம்!

சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையை முன்னிட்டு நெல்லை மார்க்கெட்டுகளில் பூஜை பொருட்கள் விற்பனை மும்மரம்.

Samayam Tamil 5 Oct 2022, 3:07 pm
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் கொண்டாடப்படும் விழா நவராத்திரி விழாவாகும். இவ்விழா இந்தியா மட்டுமன்றி பல நாடுகளிலும் ஒன்பது நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. குறிப்பாக முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் இலட்சுமி தேவியையும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபடுவர்.
Samayam Tamil poojai things sale


அவ்வாறு சரஸ்வதி தேவியை கொண்டு விழா நிறைவுப் பெறுவதால் அந்த இறுதி நாள் ”சரஸ்வதி பூஜை” என அழைக்கப்படுகின்றது. மேலும் கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் வேண்டி வணக்கிடும் திருநாளே ”சரஸ்வதி பூஜை” ஆகும். நவராத்திரி கடைசி நாளான நேற்று சரஸ்வதி பூஜையை மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடினர்.

குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் காலை முதலே பூஜை பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் கடைகளில் திரண்ட வண்ணம் உள்ளனர். பூஜை பொருட்கள் மட்டுமின்றி காய்கறி கடைகளிலும் பொது மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை வீடுகளில் மட்டுமின்றி அலுவலகங்கள், வணிக நிறுவனங்களிலும் கொண்டாடுவது வழக்கம். இதற்கான பூஜை பொருட்களான அவல், பொரி, பழங்கள் உள்ளிட்டவை வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் பூஜை பொருட்களின் விற்பனையும் அதிகரித்த வண்ணம் உள்ளதால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பண்டிகை, திருமண சீசனில் இப்படியா.. எகிறப்போகும் தங்கம் விலை!
குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் பண்டிகைகள், கொண்டாடட்டங்கள் பெரிய அளவில் இல்லாத நிலையில் விற்பனை என்பதும் குறைந்த அளவிலேயே இருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவதால் பொதுமக்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதனால் நெல்லை டவுன், தச்சநல்லூர், பாளை மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் கூட்டம் களை கட்டி காணப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் தற்காலிக சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு விற்பனையானது மும்மரமாக நடந்து வருகிறது. சரஸ்வதி பூஜையை யொட்டி பொருட்களை வாங்க பொதுமக்கள் சாலையில் திரண்டதால் நெல்லை சந்திப்பு, எஸ்.என்.ஹைரோடு, டவுன், வண்ணார்பேட்டை, தச்சநல்லூர், பாளை மார்க்கெட், சமாதானபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. இதனை சீர்செய்யும் வகையிலும் போக்குவரத்து காவலர்கள் பணியில் மும்மரமாக ஈடுபட்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்