ஆப்நகரம்

போஸ்ட் ஆபீஸில் அட்டகாசமான வருமானம் வழங்கும் திட்டங்கள்!

தபால் அலுவலக திட்டங்களுக்கு என்ன வட்டி வழங்கப்படுகிறது என்பதை பார்க்கலாம்.

Samayam Tamil 6 Dec 2020, 1:03 pm

இந்திய தபால் துறை சார்பில் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இவை ஒட்டுமொத்தமாக தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. தற்போது இந்திய அரசு 9 தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களை வழங்குகின்றன.
Samayam Tamil Post office savings


பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட், தேசிய சேமிப்பு சான்றிதழ், சுகன்யா சம்ரிதி யோஜனா, டைம் டெபாசிட், சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் உள்ளிட்டவை இதில் அடங்கும். குறிப்பாக, தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் பிரதமர் மோடியே முதலீடு செய்திருக்கிறார்.

போஸ்ட் ஆபீசிலேயே நீங்க ஒரு கோடி சம்பாதிக்கலாம்... இது செம திட்டம்!

இதுபோக, 500 ரூபாய் மினிமம் பேலன்ஸுடன் தபால் அலுவலக சேமிப்பு கணக்கை ஈசியாக தொடங்கிவிடலாம். தபால் அலுவலக திட்டங்களுக்கு என்ன வட்டி வழங்கப்படுகிறது என்பதை பார்க்கலாம்.

1. தபால் அலுவலக சேமிப்பு கணக்கு : ஆண்டுக்கு 4% வட்டி

2. தபால் அலுவலக கால டெபாசிட் கணக்கு : 1 முதல் 3 ஆண்டுகளுக்கு 5.5% வட்டி. ஐந்து ஆண்டு டெபாசிட்டுக்கு 6.7% வட்டி.

3. தொடர் வைப்பு (RD) : தபால் அலுவலக தொடர்பு வைப்பு திட்டங்களுக்கு 5.8% வட்டி வழங்கப்படுகிறது.

4. சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் : ஆண்டுக்கு 7.4% வட்டி

5. மாத வருமான திட்டம் : ஆண்டுக்கு 6.6% வட்டி

6. தேசிய சேமிப்பு சான்றிதழ் : ஆண்டுக்கு 6.8% வட்டி

7. பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் (PPF) : ஆண்டுக்கு 7.1% வட்டி

8. கிசான் விகாஸ் பத்திரம் : 6.9% வட்டி. இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகை 124 மாதங்களில் இருமடங்காக உயர்ந்துவிடும்.

9. சுகன்யா சம்ரிதி யோஜனா : ஆண்டுக்கு 7.6%

அடுத்த செய்தி

டிரெண்டிங்