ஆப்நகரம்

தொழில் பழகுவோருக்கு நல்ல வாய்ப்பு.. மே 8ஆம் தேதி சிறப்பு முகாம்!

பிரதமரின் தேசிய தொழில் பழகுநர் மேளா மே 8ஆம் தேதியன்று 200க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 6 May 2023, 8:28 am
ஸ்கில் இந்தியா (திறன் இந்தியா) திட்டத்தின் கீழ் இந்திய இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் மே 8ஆம் தேதி பிரதமரின் தேசிய தொழில் பழகுநர் மேளாவை நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நடத்துகிறது.
Samayam Tamil skill



உள்ளூர் இளைஞர்களுக்கு பொருத்தமான தொழிற்பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்காக இந்த மேளாவில் பங்கேற்க பல உள்ளூர் நிறுவனங்கள் அழைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ஒரே தளத்தின் மூலம், பங்கேற்கும் நிறுவனங்கள், திறன்மிக்க பயிற்சியாளர்களுடன் இணைத்து அவர்களது தகுதிகளை அந்த இடத்திலேயே தேர்வு செய்து இளைஞர்களின் வாழ்வாதார வாய்ப்புகளை வலுப்படுத்த இது உதவியாக இருக்கும்.

தனிநபர்கள் https://www.apprenticeshipindia.gov.in/ என்ற முகவரியைப் பார்வையிடுவதன் மூலம் இந்த மேளாவிற்குப் பதிவு செய்யலாம். 5ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்கள், திறன் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள், ஐடிஐ சான்றிதழ் பெற்றவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள், பட்டதாரிகள் போன்றோர் இந்தப் பயிற்சி மேளாவுக்குல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தின் மூன்று நகல்களையும், அனைத்து மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் சான்றிதழ்களின் மூன்று நகல்களையும், புகைப்பட அடையாள அட்டை (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவை) மற்றும் மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும் அந்தந்த இடங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் தேவையான ஆவணங்களுடன் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் செல்லுமாறு அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது திங்கள் கிழமை நாடு முழுவதும் இது போன்ற பயிற்சி மேளாக்கள் நடத்தப்படுகின்றன. இந்த மேளாக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபர்களுக்கு பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஆண்டுக்கு 15 லட்சம் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி மூலம் பயிற்சி அளிக்க அரசு முயற்சித்து வருகிறது. மேலும் இந்தப் பணியை நிறைவேற்ற, நிறுவனங்கள் மற்றும் இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் முயற்சியாக இந்த மேளா நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்