ஆப்நகரம்

கர்ப்பிணி பெண்களுக்கு 6000 ரூபாய்.. மோடி அரசின் மாஸான திட்டம்!

கர்ப்பிணி பெண்களுக்கு 6000 ரூபாய் கிடைக்கும். அதை எப்படி வாங்குவது என்று இங்கே பார்க்கவும்.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 30 Mar 2023, 2:31 pm
பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில், பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் நோக்கில் மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் திருமணமான பெண்களுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் திருமணமான பெண்களுக்கு அரசே நிதியுதவி வழங்குகிறது. அந்த திட்டத்தின் பெயர் பிரதான் மந்திரி மாத்ருத்வா வந்தனா யோஜனா (மாத்ரு வந்தனா யோஜனா). 2017ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி மோடி அரசால் தொடங்கப்பட்டது.
Samayam Tamil govt scheme


மாத்ருத்வா வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு அரசு நிதியுதவி வழங்குகிறது. இந்தியாவில் பிறக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படக்கூடாது எனவும், எந்த விதமான நோயாலும் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்திலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

முக்கிய அம்சங்கள்!

>> கர்ப்பிணிப் பெண்களின் வயது 19 ஆக இருக்க வேண்டும்.
>> இந்த திட்டத்தில் நீங்கள் ஆஃப்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
>> இத்திட்டத்தில் அரசு 6000 ரூபாயை 4 தவணைகளில் வழங்கும்.

பணம் எப்படி வரும்?

இத்திட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு முதல் கட்டமாக 1000 ரூபாயும், இரண்டாம் கட்டமாக 2000 ரூபாயும், மூன்றாம் கட்டமாக 2000 ரூபாயும் வழங்கப்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் அரசு மருத்துவமனையில் கடைசி தவணையாக 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட தொகை நேரடியாக வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும்.

யாரை தொடர்பு கொள்வது?

இந்தத் திட்டத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், 7998799804 என்ற அதிகாரப்பூர்வ ஹெல்ப்லைன் எண்ணை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

நிபந்தனைகள்!

>> கர்ப்பிணிப் பெண்கள் தாங்கள் கருவுற்றதை பதிவு செய்திருக்க வேண்டும்.
>> அரசு சுகாதார மையங்களில் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். குறிப்பிட்ட காலத்தில் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
>> தனியாரிடம் சிகிச்சை பெற்றுக்கொண்டு அரசின் இந்த உதவியைப் பெற முடியாது.
>> ஆதார் கார்டு கட்டாயம் தேவை. வங்கிக் கணக்கு விவரங்களையும் வழங்க வேண்டும்.

தனியாரிடம் செல்லும் பெண்கள்!

இன்றைய காலத்தில் பெரும்பாலான பெண்கள் தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கின்றனர். அரசு மருத்துவமனைகளை புறக்கணிக்கின்றனர். ஆனால் அரசின் இந்த நிதியுதவியைப் பெற சிலர் முயற்சி செய்கின்றனர். முழுக்க முழுக்க அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பிரசவம் பார்த்தால் மட்டுமே இந்த நிதியுதவியைப் பெற விண்ணப்பிக்க முடியும் என்று சில இடங்களில் செவிலியர்கள் கூறுகின்றனர். ஆனாலும், முதல் இரண்டு தவணைகளில் அரசிடமிருந்து நிதியுதவி பெற்றுக் கொண்டு பிரசவத்தை மட்டும் தனியாரிடம் பார்த்துக் கொள்ளும் போக்கு பரவலாக உள்ளது. அரசு மருத்துவமனைகளில் கவனிப்பு சரியாக இல்லை என்பது அவர்களின் புகாராக உள்ளது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்