ஆப்நகரம்

பொங்கல் பண்டிகைக்கு வேட்டி - சேலை: கைத்தறி துறையினர் மகிழ்ச்சி!

பொங்கல் பண்டிகைக்கு வேட்டி சேலை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் கைத்தறி துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Samayam Tamil 12 Aug 2022, 8:22 am
பொங்கல் பண்டிகை சமயத்தில் கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்கு தேவையான மொத்த சேலைகள் மற்றும் வேட்டிகள் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்டு தமிழக வருவாய்த் துறைக்கு வழங்கப்படுகிறது.
Samayam Tamil vetti saree scheme


இத்திட்டத்தின்கீழ் 2,664 கைத்தறி நெசவாளர்கள் மற்றும் 11,124 பெடல்தறி நெசவாளர்கள், 41,983 விசைத்தறி நெசவாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அதோடு, தமிழகத்திலுள்ள கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் வசிக்கும் 3.59 கோடி மக்களுக்கு இத்திட்டம் பயனளிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்திற்கான உற்பத்தி நிறைவடைந்தவுடன், வேட்டி சேலை வழங்கும் திட்டத்தைத் தொடங்குவதற்கான கொள்கை அளவிலான அரசாணைகள் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வெளியிடப்பட்டது. வேட்டி சேலை உற்பத்திக்கு தேவையான நூல் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் கைத்தறி மற்றும் துணிநூல் துறையால் மேற்கொள்ளப்படுகின்றன.

கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் தொடர்ந்து உற்பத்தியை மேற்கொள்ளும் வகையில், 2022 ஜனவரி முதல் 2022 ஆகஸ்ட் வரை, கைத்தறி மற்றும் பெடல் தறி நெசவாளர்கள் தொடர்ந்து வேலைவாய்ப்பு பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வங்கியில் பணம் போட்டவர்கள் தலையில் இடி.. இனி பணம் எடுக்க முடியாது!!
2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை சமயத்தில் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திடவும், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் தொடர்ந்து உற்பத்தியை மேற்கொள்ளவும் அரசின் கொள்கை அளவிலான ஆணைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.

இத்திட்டத்திற்காக 2022–23 நிதியாண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் ரூ.487.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்