ஆப்நகரம்

பிரதமர் மோடியே முதலீடு செஞ்சிருக்கார்.. நல்ல வருமானம் தரும் அஞ்சலக திட்டம்!

தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்.

Samayam Tamil 24 Feb 2022, 2:39 pm
ரிஸ்க் எடுக்காமல் பாதுகாப்பாக முதலீடு செய்து நல்ல வருமானம் பெற விரும்புவோருக்கு தபால் அலுவலக சிறு சேமிப்புத் திட்டங்கள் நல்ல வாய்ப்பு வழங்குகின்றன. இத்திட்டங்களில் ஆபத்து இல்லை; இருந்தாலும் நல்ல வட்டி விகிதம் கிடைக்கிறது.
Samayam Tamil post office


குறிப்பாக, தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificate) திட்டத்துக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியே முதலீடு செய்திருக்கிறார்.

இத்திட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யலாம். தற்போது ஆண்டுக்கு 6.8% வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது. வட்டித் தொகை ஆண்டுவாரியாக கணக்கிடப்பட்டு மெச்சூரிட்டியின்போது செலுத்தப்படும்.

அந்த இமயமலை சாமியாரே இவர்தான்.. சித்ரா வழக்கில் திருப்பம்!
உதாரணமாக தற்போதைய வட்டி விகிதத்தை வைத்துப் பார்க்கலாம். இப்போது தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் 1000 ரூபாய் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். ஆண்டுக்கு 6.8% வட்டி என வைத்துக்கொண்டால் 5 ஆண்டுகளில் உங்கள் 1000 ரூபாய் வளர்ந்து 1389.49 ரூபாயாக மாறியிருக்கும்.

இத்திட்டத்தில் முதலீடு செய்ய 18 வயதை தொட்டவராக இருக்க வேண்டும். சிறுவர்கள் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் முதலீடு செய்யலாம். 18 வயதுக்கு மேற்பட்ட மூன்று பேர் வரை இணைந்து கூட்டுக் கணக்காகவும் (Joint account) முதலீடு செய்யலாம்.

தேசிய சேமிப்பு சான்றிதழில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச முதலீட்டுக்கு எந்த வரம்பும் இல்லை. இத்திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு வருமான வரிச் சலுகையும் உண்டு.

அடுத்த செய்தி

டிரெண்டிங்