ஆப்நகரம்

HDFC FD interest rate: வைப்பு தொகை வட்டி உயர்வு.. எச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு நல்ல நியூஸ்!

ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது எச்டிஎஃப்சி வங்கி.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 19 Feb 2023, 12:08 pm
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி பேங்க் (HDFC Bank) ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த முறை 2 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்டுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
Samayam Tamil HDFC Bank
HDFC Bank


ரிசர்வ் வங்கி பிப்ரவரி 8ஆம் தேதி ரெப்போ வட்டியை 6.50% ஆக உயர்த்தியுள்ளது. இதன் விளைவாக பல்வேறு வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. இந்த வரிசையில் எச்டிஎஃப்சி வங்கியும் ஃபிக்சட் டெபாசிட் வட்டியை உயர்த்தியுள்ளது.

எச்டிஎஃப்சி வங்கியின் வட்டி உயர்வு பிப்ரவரி 17ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய வட்டி விகிதங்களின் பட்டியலை பார்க்கலாம்.

புதிய வட்டி விகிதங்கள்:


46 - 60 நாட்கள் : 5.75%

61 - 89 நாட்கள் : 6%

90 நாட்கள் - 6 மாதம் : 6.50%

6 மாதம் - 9 மாதம் : 6.65%

9 மாதம் - 1 ஆண்டு : 6.75%

1 ஆண்டு - 15 மாதம் : 7%

15 மாதம் - 2 ஆண்டு : 7.15%

2 ஆண்டு - 10 ஆண்டு : 7%

சீனியர் சிட்டிசன்களுக்கு:

5 ஆண்டு வரையிலான ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு சீனியர் சிட்டிசன்கள் கூடுதலாக 0.50% வட்டி விகிதம் பெறலாம் என எச்டிஎஃப்சி வங்கி கூறுகிறது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்