ஆப்நகரம்

Fixed Deposit வட்டியில் திடீர் மாற்றம்.. புதிய வட்டி விகிதம் இதுதான்!

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதம் மாற்றப்படுவதாக ஐசிஐசிஐ வங்கி அறிவிப்பு.

Samayam Tamil 1 Dec 2021, 4:34 pm

ஹைலைட்ஸ்:

  • ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம் மாற்றம்
  • வெளியான திடீர் அறிவிப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Fixed Deposit
தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி 7 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் (Fixed Deposit) திட்டங்களுக்கு வட்டி விகிதம் மாற்றப்பட்டுள்ளது.
புதிய ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கும், பழைய திட்டங்களை புதுப்பிப்பதற்கும் இப்புதிய வட்டி விகிதங்கள் பொருந்தும். பணத்தை டெபாசிட் செய்த நாளில் இருந்து 7 நாட்களுக்குள் பணத்தை எடுத்துவிட்டால் வட்டி செலுத்தப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

5 கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட்டுகளுக்கு புதிய வட்டி விகிதங்கள் நவம்பர் 16ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகின்றன. 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட்டுகள் மற்றும் 2 கோடி முதல் 5 கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட்டுகளுக்கு நவம்பர் 29ஆம் தேதி முதல் புதிய வட்டி விகிதம் அமல்படுத்தப்படுகின்றன.

36,000 ரூபாய் பென்சன்... மத்திய அரசின் சூப்பர் திட்டம்!
புதிய வட்டி விகிதம் (ரூ.2 கோடிக்கு உட்பட்ட டெபாசிட்):

7 - 14 நாட்கள் : 2.50%

15 - 29 நாட்கள் : 2.50%

30 - 45 நாட்கள் : 3%

46 - 60 நாட்கள் - 3%

61 - 90 நாட்கள் - 3%

91 - 120 நாட்கள் - 3.50%

121 - 150 நாட்கள் : 3.50%

151 - 184 நாட்கள் : 3.50%

185 - 210 நாட்கள் : 4.40%

211 - 270 நாட்கள் : 4.40%

271 - 289 நாட்கள் : 4.40%

290 நாட்கள் - 1 ஆண்டு : 4.40%

1 ஆண்டு - 389 நாட்கள் : 4.90%

390 நாட்கள் - 15 மாதங்களுக்குள் : 4.90%

15 மாதம் - 18 மாதம் : 4.90%

18 மாதம் - 2 ஆண்டு : 5%

2 ஆண்டு 1 நாள் - 3 ஆண்டுகள் - 5.15%

3 ஆண்டு 1 நாள் - 5 ஆண்டுகள் - 5.35%

5 ஆண்டு 1 நாள் - 10 ஆண்டுகள் - 5.50%

அடுத்த செய்தி

டிரெண்டிங்