ஆப்நகரம்

வட்டியை உயர்த்திய ஐசிஐசிஐ வங்கி.. சீனியர் சிட்டிசன்களுக்கும் ஹேப்பி நியூஸ்!

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டியை உயர்த்திய ஐசிஐசிஐ வங்கி.

Samayam Tamil 21 Jan 2022, 3:55 pm
எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, கனரா, ஆக்ஸிஸ் உள்ளிட்ட வங்கிகள் அண்மையில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டன. இந்நிலையில், தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியும் (ICICI Bank) ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு (Fixed Deposit) வட்டியை உயர்த்தியுள்ளது.
Samayam Tamil Fixed deposit


புதிய வட்டி விகிதங்கள் ஜனவரி 20ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. இனி 7 முதல் 29 நாள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 2.50% வட்டி கிடைக்கும். 30 முதல் 45 நாள் வரையிலான டெபாசிட்டுக்கு 3% வட்டி கிடைக்கும். மற்றவர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு 0.50% அதிக வட்டி கிடைக்கும்.

Fixed Deposit வட்டி விகிதம் உயர்வு.. ஹேப்பி நியூஸ்!
புதிய வட்டி விகிதங்களின் பட்டியல் (ஜனவரி 20 முதல்):

7 - 14 நாள் : 2.50%

15 - 29 நாள் : 2.50%

30 - 45 நாள் : 3%

46 - 60 நாள் : 3%

61 - 90 நாள் : 3%

91 - 120 நாள் : 3.50%

121 - 150 நாள் : 3.50%

151 - 184 நாள் : 3.50%

185 - 210 நாள் : 4.40%

211 - 270 நாள் : 4.40%

271 - 289 நாள் : 4.40%

290 நாள் - 1 ஆண்டு : 4.40%

1 ஆண்டு - 389 நாள் : 5%

390 நாள் - 15 மாதம் : 5%

15 மாதம் - 18 மாதம் : 5%

18 மாதம் - 2 ஆண்டு : 5%

2 ஆண்டு 1 நாள் - 3 ஆண்டு : 5.20%

3 ஆண்டு 1 நாள் - 5 ஆண்டு : 5.45%

5 ஆண்டு 1 நாள் - 10 ஆண்டு : 5.60%

அடுத்த செய்தி

டிரெண்டிங்