ஆப்நகரம்

Karur Vysya Bank: வாடிக்கையாளர்களுக்கு வட்டி உயர்வு.. புதிய ரேட் இதுதான்!

கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை கரூர் வைஸ்யா வங்கி உயர்த்தியுள்ளது.

Samayam Tamil 6 Jun 2022, 2:02 pm
தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கி (Karur Vysya Bank) கடன்களுக்கான அடிப்ப்படை வட்டி விகிதங்களை 0.40% உயர்த்தியுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 13ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என கரூர் வைஸ்யா வங்கி தெரிவித்துள்ளது.
Samayam Tamil kvb


கரூர் வைஸ்யா வங்கி வெளியிட்டுள்ள தகவல்படி, அடிப்படை வட்டி விகிதம் 8.35 விழுக்காட்டில் இருந்து 8.75 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், BPLR விகிதம் 13.35 விழுக்காட்டில் இருந்து 13.75 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் கடன் வாங்கியோர் செலுத்தும் EMI தொகை உயரும். அண்மையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது. கடுமையான பணவீக்கத்தையும், விலைவாசி ஏற்றத்தையும் சமாளிக்க ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டது.

வேலையை விட்டு போனா 77 லட்சம் ரூபாய்.. ஊழியர்களை அதிரவைத்த நிறுவனம்!
இதையடுத்து பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது கரூர் வைஸ்யா வங்கியும் கடன்களுக்கான அடிப்படை வட்டியை உயர்த்தியுள்ளது.

கரூர் வைஸ்யா வங்கி வீட்டுக் கடன்களுக்கு 7.15% முதல் 9.35% வட்டி விதிக்கிறது. தனிநபர் கடன்களுக்கு 8.70% முதல் 11.70% வட்டி விதிக்கிறது. தனிநபர் கடன்களுக்கு 8.70% முதல் 11.70% வட்டி விதிக்கிறது.

நான்கு சக்கர வாகன கடன்களுக்கு 7.80% முதல் 8.10% வட்டி விதிக்கிறது. இருசக்கர வாகன கடன்களுக்கு 14% முதல் 16% வட்டி விதிக்கிறது. நகைக் கடன்களுக்கு 9.5% முதல் 10% வட்டி விதிக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்