ஆப்நகரம்

சேமிப்பு, முதலீடு ஒரே இடத்தில்.. வருமான வரி சலுகையும் உண்டு!

சேமிப்பும், முதலீடும் ஒரே இடத்தில் கிடைக்கும் பிஎன்பி பொது வருங்கால வைப்பு நிதி.

Samayam Tamil 6 Jan 2022, 4:12 pm
சேமிப்பு தனியே, முதலீடு தனியே என்றில்லாமல் இரண்டும் ஒரே இடத்தில் இருந்தால் எப்படி இருக்கும்? அட, அதற்கும் வழி இருக்கத்தான் செய்கிறது. பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் (PNB) பொது வருங்கால வைப்பு நிதியில் (PPF) சேமிப்பு, முதலீடு இரண்டையும் செய்யலாம்.
Samayam Tamil cash


பஞ்சாப் நேஷனல் வங்கியின் பொது வருங்கால வைப்பு நிதி சேமிப்பு மற்றும் முதலீடு என டூ இன் ஒன் சேவையை வழங்குவதோடு மட்டுமல்லாமல் நல்ல வட்டி, வரி சலுகைகளையும் கொடுக்கிறது.

பொது வருங்கால வைப்பு நிதி என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். இதில் நல்ல வட்டி வருமானம், வரிச் சலுகை இரண்டையுமே முதலீட்டாளரால் பெற முடியும். பஞ்சாப் நேஷனல் வங்கியின் எல்லா கிளைகளிலும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

வங்கிக் கணக்கில் பணம் காணாமல் போகும்... ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!
இந்திய குடிமக்கள் அனைவரும் இதில் முதலீடு செய்யலாம். சிறுவர்கள் அல்லது மனநலம் குன்றியவர்கள் பேரில் பாதுகாவலர் முதலீடு செய்யலாம். கூட்டுக் கணக்காக (Joint account) தொடங்க முடியாது.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் (NRI) பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்யலாம். இந்துக் கூட்டு குடும்பங்கள் இதில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படாது.

குறைந்தபட்சம் 500 ரூபாய் டெபாசிட்டுடன் கணக்கை தொடங்க வேண்டும். கணக்குக்கான கால வரம்பு 15 ஆண்டுகள். அதன்பின் ஒவ்வொரு 5 ஆண்டுகளாக நீட்டித்துக்கொள்ளலாம். பொது வருங்கால வைப்பு நிதிக்கு கிடைக்கும் வட்டித் தொகைக்கு வருமான வரி விலக்கு உண்டு.

அடுத்த செய்தி

டிரெண்டிங்