ஆப்நகரம்

புண்படுத்தும் பங்குச் சந்தை.. பாதுகாப்பாக முதலீடு செய்ய 5 நச் வழிகள்!

பங்குச் சந்தை சரிந்து வரும் நிலையில் பாதுகாப்பாக முதலீடு செய்ய 5 சிறந்த வழிகள்.

Samayam Tamil 22 Jun 2022, 2:30 pm
சமீப நாட்களாக பங்குச் சந்தைகள் சரிந்து வருகின்றன. பணவீக்கம், வட்டி விகிதம் உயர்வு, பொருளாதார சரிவு ஏற்படும் என்ற அச்சம் போன்ற காரணங்களால் பங்குச் சந்தைகள் சரிந்து வருகின்றன. இன்றும் இதே நிலை தொடர்கிறது.
Samayam Tamil put your money in these five safe instruments amid turbulent stock markets
புண்படுத்தும் பங்குச் சந்தை.. பாதுகாப்பாக முதலீடு செய்ய 5 நச் வழிகள்!


இந்த சூழலில் பங்குச் சந்தையில் இருந்து ஒதுங்கி பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புவோர் எதில் பணத்தை போடலாம்?

​தங்கம்

பொருளாதார சரிவு, பணவீக்கம், போர்க்காலம் என எந்தவொரு நெருக்கடி வந்தாலும் அதை சமாளித்து உயரக்கூடியது தங்கம். இந்தியர்கள் தங்கத்தில் காலம்காலமாக முதலீடு செய்து வந்துள்ளனர். எனவே தங்கம் மற்றும் தங்கம் சார்ந்தவற்றில் முதலீடு செய்யலாம்.

​தங்கப் பத்திரம்

தங்கப் பத்திர விற்பனை ஜூன் 20ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. ஜூன் 24ஆம் தேதி தங்கப் பத்திர விற்பனை முடிவுக்கு வருகிறது. தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் தங்கமாக வாங்குவதை விட தங்கப் பத்திரமாக வாங்குவதே சிறந்தது என்கின்றனர் முதலீட்டு ஆலோசகர்கள். பல்வேறு சலுகைகள், பலன்களுடன் தங்கப் பத்திரம் ஒரு பாதுகாப்பான முதலீடாக இருக்கிறது.

​அரசு பத்திரம்

இந்திய அரசின் பத்திரங்களுக்கு நல்ல வட்டி கிடைக்கிறது. பங்குச் சந்தை சரியும் காலத்தில் அரசு பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.

​ஃபிக்சட் டெபாசிட்

ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான முதலீடு என்றால் முதலில் நினைவுக்கு வருவது ஃபிக்சட் டெபாசிட்தான். குறிப்பாக சீனியர் சிட்டிசன்கள் அதிகம் ஃபிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்கின்றனர். எனவே, அதிக வட்டி வழங்கும் வங்கிகளில் ஃபிக்சட் டெபாசிட் முதலீடு செய்யலாம்.

​சிறு சேமிப்பு திட்டங்கள்

பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு சான்றிதழ், கிசான் விகாஸ் பத்திரம், சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் போன்ற தபால் அலுவலக சிறு சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பான முதலீடு மட்டுமல்லாமல் நல்ல வட்டி விகிதமும் கிடைக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்