ஆப்நகரம்

இந்திய உறைந்த கடல் உணவுக்கான.. தடை நீக்கம்.. கத்தார் அதிரடி அறிவிப்பு!

கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவில் இருந்து செல்லும் உறைந்த கடல் உணவிற்கான தற்காலிக தடையை கத்தார் நீக்கியுள்ளது.

Samayam Tamil 18 Feb 2023, 11:28 am
கடந்த ஆண்டு நவம்பரில், ஃபிஃபா உலகக் கோப்பைக்கு முன்னதாக, இந்தியாவில் இருந்து சென்ற சில சரக்குகளில் இருந்து விப்ரியோ காலரா கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இறக்குமதியை கத்தார் நாட்டில் தடை விதிக்கப்பட்டது.
Samayam Tamil Forzen sea food


நேற்றைய தினம் இந்தியாவில் இருந்து உறைந்த கடல் உணவுகளை இறக்குமதி செய்வதற்கான தற்காலிக தடையை கத்தார் நீக்கியுள்ளது, இது வளைகுடா நாட்டிற்கான மேம்பட்ட ஏற்றுமதிக்கு வழி வகுத்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

கால்பந்தாட்ட நிகழ்வுக்கு முன்னதாக, தங்கள் நாட்டில் போதிய சோதனைக் கூடங்கள் இல்லாததால், இந்தத் தடை தற்காலிகமானது என்று கத்தார் அதிகாரிகள் இந்தியாவுக்குத் முன்னதாக தெரிவித்திருந்தனர்.

மத்திய வர்த்தகத் துறையும், கத்தாரில் உள்ள இந்திய தூதரகமும் இணைந்து இந்தப் பிரச்சினையைத் தீர்க்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் இத்தடை தொடர்பாக கத்தாரின் பொது சுகாதார அமைச்சகத்துடன் பல சுற்று விவாதங்கள் நடத்தப்பட்டன. அதன் முடிவாக பிப்ரவரி 16 ஆம் தேதி தடையை நீக்குவதற்கான அறிவிப்புக்கு கத்தார் அரசு ஒப்புதல் அளித்தது.

இந்த அறிவிப்பு இந்தியாவில் உள்ள கடல் உணவு ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இடைநீக்கத்தில் இதேபோன்ற செயல்கள் நடப்பது தவிர்க்கப்பட முடியாது என்று கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (MPEDA) தலைவர் டி.வி.சுவாமி கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி பிப்ரவரி 14 அன்று, பெய்ஜிங் 99 இந்திய கடல் உணவு பதப்படுத்தும் ஏற்றுமதியாளர்களின் இடைநீக்கத்தை நீக்கியதும் குறிப்பிடத்தக்கது. 2020 டிசம்பரில் இருந்து பெய்ஜிங்கின் மொத்தம் 110 யூனிட்களின் இடைநீக்கத்தை உயர்த்துவதில் MPEDA, மற்ற ஏஜென்சிகளுடன் இணைந்து இச்செயலகளில் முக்கிய பணியை ஆற்றி வருகிறது.


அடுத்த செய்தி

டிரெண்டிங்