ஆப்நகரம்

இனி ரயில் டிக்கெட் கட்டாயம் கிடைக்கும்.. புதிய வசதி அறிமுகம்!

ரயில்களில் இனி கன்பார்ம் டிக்கெட் கட்டாயம் கிடைக்கும். நீங்கள் இதைச் செய்தால் போதும்.

Samayam Tamil 4 Oct 2022, 10:22 am
ரயிலில் உறுதிசெய்யப்பட்ட டிக்கெட் (கன்பார்ம் டிக்கெட்) கிடைக்க நீங்கள் பல மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டியிருக்கும். கன்பார்ம் செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்காவிட்டால் அதிகம் செலவு செய்து தட்கல் அல்லது பிரீமியம் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இப்போது நீங்கள் அதை செய்ய வேண்டியதில்லை. இனி ரயில்களில் ஒரு பெர்த் காலியாக இருந்தால், அதை நீங்கள் உடனடியாக அறிந்துகொள்வீர்கள். உடனடியாக நீங்கள் அந்த டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும்.
Samayam Tamil irctc new update


IRCTC இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது, எல்லா ரயில்களிலும் இருக்கைகள் இருப்பதைக் காணலாம். இருக்கை காலியாக இருந்தால் முன்பதிவு செய்து, அது காலியாகவில்லை என்றால், அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் காத்திருப்பு டிக்கெட்டை எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை அதிக வெய்ட்டிங் லிஸ்ட் இருந்தால், நீங்கள் முன்பதிவு செய்ய வேண்டாம்.

கிழிந்த நோட்டு ஏடிஎம்மில் வந்தால் என்ன செய்வது?

இதுவரை ரயிலில் எந்த இருக்கை காலியாக இருக்கிறது என்று தெரிந்துகொள்ளும் எந்த வசதியும் இல்லை. IRCTC இப்போது இந்த வசதியை தனது பயணிகளுக்கு வழங்குகிறது. IRCTC புதிய புஷ் நோட்டிபிகேசன் வசதியைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், பயனர்கள் இருக்கை வசதி உள்ளிட்ட பல வகையான வசதிகள் பற்றிய தகவல்களைப் பெற முடியும்.

பழைய நாணயங்களை வாங்கவோ விற்கவோ கூடாது? ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!

IRCTC சமீபத்தில் தனது இணையதளத்தை புதுப்பித்துள்ளது. அதில் பல புதிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ரயிலில் இருக்கை காலியாக இருந்தால் அதன் அறிவிப்பு பயனாளிகளின் மொபைல் நம்பருக்கும் செல்லும். பயனர்கள் தங்கள் வசதிக்கேற்ப காலியாக உள்ள இருக்கையை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக, பயனர் முதலில் ஐஆர்சிடிசி இணையதளத்திற்குச் சென்று புஷ் அறிவிப்பு வசதியை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்னொரு ஜாக்பாட்.. மாஸாக உயரும் சம்பளம்!
ஒரு குறிப்பிட்ட தேதிக்கு நீங்கள் ஒரு ரயிலில் இருக்கையை முன்பதிவு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் ரயிலில் எந்த இருக்கையும் காலியாக இல்லை. அப்படியென்றால் நீங்கள் புக்கிங் செய்ய மாட்டீர்கள். இதுபோன்ற சூழலில் ஏதேனும் ஒரு பயணி தனது டிக்கெட்டை ரத்து செய்தால் உங்கள் மொபைலில் ஒரு அறிவிப்பு வரும். இந்த எஸ்எம்எஸ் ரயில் எண் பற்றிய தகவல்களையும் கொண்டிருக்கும். அதன் பிறகு நீங்கள் விரும்பினால் இந்த டிக்கெட்டை முன்பதிவு செய்து உடனடியாக பயணம் செய்யலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்