ஆப்நகரம்

அரசு ஊழியர்களுக்கு மூன்று ஜாக்பாட்.. மொத்தமாக கொட்டப்போகும் பண மழை!

அரசு ஊழியர்களுக்கு ஒரே மாதத்தில் மூன்று ஜாக்பாட்.

Samayam Tamil 20 May 2022, 4:18 pm
ரயில்வே ஊழியர்களுக்கு அகவிலைப்படியை அரசு உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அகவிலைப்படி நிலுவைத் தொகையும் சேர்த்து ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக வெளியாகியுள்ளது.
Samayam Tamil railway employees to receive three jackpots in may month salary along with da hike and dearness allowance arrears
அரசு ஊழியர்களுக்கு மூன்று ஜாக்பாட்.. மொத்தமாக கொட்டப்போகும் பண மழை!


​அகவிலைப்படி உயர்வு

ரயில்வே ஊழியர்களுக்கு ரயில்வே வாரியம் அகவிலைப்படியை 14% உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் ரயில்வே ஊழியரளுக்கு நிலுவைத் தொகையும் நிறைய கிடைக்கும் என கூறுகின்றனர்.

​அகவிலைப்படி நிலுவைத்தொகை

ரயில்வே ஊழியர்களுக்கு 10 மாதங்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டும். எனவே, மிகப்பெரிய தொகை மொத்தமாக வருவதால் அகவிலைப்படி நிலுவைத் தொகையே ரயில்வே ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் என கூறலாம்.

​இரண்டு பிரிவுகளாக உயர்வு

ரயில்வே ஊழியர்களுக்கு அகவிலைப்படி இரண்டு பிரிவுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. 6ஆவது சம்பள கமிஷன் கீழ் ஊதியம் பெறும் ரயில்வே ஊழியர்களுக்கு 2021 ஜூலை முதல் 7% அகவிலைப்படி உயர்வு, பின்னர் 2022 ஜனவரி முதல் 7% அகவிலைப்படி உயர்வு என மொத்தம் 14% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.

​மொத்த அகவிலைப்படி

இதுவரை, 6ஆவது சம்பள கமிஷன் கீழ் உள்ள ரயில்வே ஊழியர்களுக்கு 189% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் 14% சேர தற்போது ரயில்வே ஊழியர்களுக்கு மொத்த அகவிலைப்படி 203% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

​ஒட்டுமொத்தமான தொகை

இரண்டு அகவிலைப்படி உயர்வு, 10 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை, மாதச் சம்பளம் என மே மாதச் சம்பளத்தில் எல்லாம் சேர்த்து ரயில்வே ஊழியர்களுக்கு கிடைக்கும்.

​மூன்று ஜாக்பாட்

இரண்டு அகவிலைப்படி உயர்வு, 10 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை, மே மாதத்துக்கான சம்பளம் என ரயில்வே ஊழியர்களுக்கு ஒரே மாதத்தில் மூன்று ஜாக்பாட் கிடைக்க இருக்கிறது. இதனால் லட்சக்கணக்கான ரயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்