ஆப்நகரம்

டிக்கெட் இல்லாமல் ஒரு கோடி பேர் பயணம் - முரட்டு வசூல் வேட்டையில் ரயில்வே!

2019-20ஆம் ஆண்டில் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்த நபர்களிடம் வசூலித்த அபராதம் மூலம் ரூ.561.73 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

Samayam Tamil 23 Aug 2020, 7:32 pm

2019-20ஆம் ஆண்டில் நாடு முழுவதும் ரயில்களில் டிக்கெட் இல்லாமல் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயணித்துள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. இவர்களிடம் இந்திய ரயில்வே ரூ.561.73 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமை மனு வாயிலாக தெரியவந்துள்ளது. இந்த தொகை 2018-19ஆம் ஆண்டின் வருவாயை விட 6 விழுக்காடு உயர்வாகும்.
Samayam Tamil இந்திய ரயில்வே


ரயில்வே துறையின் வருவாய் தொடர்பான விவரங்களை கேட்டு மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த செயற்பாட்டாளர் சந்திர சேகர் கவுர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுத் தாக்கல் செய்தார். அதற்கு இந்திய ரயில்வே அளித்துள்ள பதிலில், 2016ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டில் தற்போது வரை டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களிடம் வசூலித்த அபராதம் மூலம் ரூ.1,938 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நல்லா தூங்கினால் ரூ.1 லட்சம் சம்பளம் - அடடே!

தனித்தனியே, 2016-17ஆம் ஆண்டில் ரூ.405.30 கோடியும், 2017-28ஆம் ஆண்டில் ரூ.441.62 கோடியும், 2018-19ஆம் ஆண்டில் ரூ.530.06 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. 2019-20ஆம் ஆண்டில் 1.10 கோடி பேர் டிக்கெட் இல்லாமல் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர்களை கட்டுப்படுத்த இந்திய ரயில்வே கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் ஒருவர், டிக்கெட் கட்டணத்துடன் ரூ.250 சேர்த்து அபராதமாக செலுத்த வேண்டும். அபராதம் செலுத்த மறுத்தால், சம்பந்தப்பட்ட நபர் ரயில்வே பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்படுவார். அவர் மீது ரயில்வே சட்டம் பிரிவு 138இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.

அதன்பின் அந்நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். அவருக்கு ரூ.1000 வரை நீதிபதியால் அபராதம் விதிக்க முடியும். அந்த அபராதத்தையும் செலுத்த மறுத்தால், ஆறு மாதம் வரை சிறைத்தண்டனை விதிக்க நேரிடும். டிக்கெட் இல்லாமல் பயணிப்போரால் ரயில்வேக்கு ஏராளமான வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால், டிக்கெட் இல்லாத பயணிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க இந்திய ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்