ஆப்நகரம்

சீனியர் சிட்டிசன் சலுகைகள் ரத்து.. மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல்!

சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்கப்படாது என ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 21 May 2022, 4:18 pm
ரயில்களில் சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் மீண்டும் வழங்கப்படாது என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே சலுகைகள் ரத்து செய்யப்பட்டதால் பல கோடி ரூபாயை அரசு சேமித்துள்ள நிலையில் மீண்டும் சலுகைகள் கிடைக்காது என அமைச்சர் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil railway minister ashwini vaishnaw says senior citizen special concessions cannot be resumed
சீனியர் சிட்டிசன் சலுகைகள் ரத்து.. மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல்!


​சீனியர் சிட்டிசன் சலுகைகள்

சீனியர் சிட்டிசன்களுக்கென ரயில்வே துறையில் 53 வகையான சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன. ரயில்வே வழங்கும் மொத்த சலுகைகளில் 80% சலுகைகள் சீனியர் சிட்டிசன்களுக்கே வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள சலுகைகள் சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்படுகின்றன.

​பெண்களுக்கான சலுகைகள்

சீனியர் சிட்டிசன்களில் 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ரயில் டிக்கெட் கட்டணத்தில் 50% தள்ளுபடி வழங்கப்பட்டது. ரயிலில் எல்லா வகுப்பு டிக்கெட்டுகளுக்கும் இச்சலுகை கிடைக்கும்.

​ஆண்களுக்கான சலுகைகள்

சீனியர் சிட்டிசன்களில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு டிக்கெட் கட்டணத்தில் 40% தள்ளுபடி வழங்கப்பட்டது.

​சலுகைகள் நிறுத்தம்

கொரோனா பாதிப்பு தொடங்கியபோது 2020 மார்ச் மாதம் முதல் சீனியர் சிட்டிசன்களுக்கு ரயிலில் வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகள் நிறுத்திவைக்கப்பட்டன.

​ரயில்வேக்கு சேமிப்பு

2020 மார்ச் முதல் 2022 மார்ச் வரை இரண்டு ஆண்டுகளில் சீனியர் சிட்டிசன்களுக்கான சலுகைகள் நிறுத்தப்பட்டதால் ரயில்வே சுமார் 1500 கோடி ரூபாயை சேமித்துள்ளது. இத்தகவலை தகவல் அறியும் உரிமை மனுவுக்கு ரயில்வே அளித்த பதிலில் தெரிவித்துள்ளது.

​சீனியர் சிட்டிசன் சலுகைகள் ரத்து

சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்வில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்கப்படாது. ஏற்கெனவே ரயில்வே மானிய விலையில் இயங்கி வருகிறது. ரயில்வே செலவிடும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 45 ரூபாய்தான் திருப்பிக் கிடைக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

​ரயில்வேக்கு வருவாய்

2020 மார்ச் முதல் 2022 மார்ச் வரை ரயிலில் பயணித்த சீனியர் சிட்டிசன்களிடம் இருந்து கிடைத்த வருவாய் 3,464 கோடி ரூபாய். அதில், சலுகைகள் ரத்து செய்யப்பட்டதால் கிடைத்த வருவாய் 1500 கோடி ரூபாய் என ரயில்வே தெரிவித்துள்ளது.

​சீனியர் சிட்டிசன் பயணிகள்

2020 மார்ச் முதல் 2022 மார்ச் வரை ரயில்களில் 7.31 கோடி சீனியர் சிட்டிசன்கள் பயணித்துள்ளனர். இதில் 4.46 கோடி பேர் 60 வயதை தாண்டிய ஆண்கள், 2.84 கோடி பேர் 58 வயதை தாண்டிய பெண்கள். மேலும் 8,310 மூன்றாம் பாலினத்தவர்கள் பயணித்துள்ளனர். இவர்களுக்கு சீனியர் சிட்டிசன்களுக்கான சலுகைகள் வழங்கப்படவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்