ஆப்நகரம்

தனியார்மயமாகும் இந்திய ரயில்வே? மத்திய அரசின் பதில் இதுதான்!

இந்திய ரயில்வேயை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து மத்திய அரசு பதிலளித்துள்ளது.

Samayam Tamil 7 Feb 2022, 7:21 pm
மத்திய அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கை நீண்ட காலமாகவே இந்தியாவில் நடைபெற்று வருகிறது. போதிய வருவாய் இல்லாமலும் நிதி நெருக்கடியிலும் சிக்கித் தவிக்கும் நிறுவனங்களின் குறிப்பிட்ட பங்குகளையோ அல்லது முழு நிறுவனத்தையோ தனியாருக்கு விற்பனை செய்து அதன் வாயிலாக நிதி திரட்டுவது மத்திய அரசின் வழக்கமான நடவடிக்கைதான்.
Samayam Tamil railways


அந்த வகையில்தான் பொதுத் துறை விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியா தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது. பொதுத் துறை வங்கிகள் சிலவற்றையும் மத்திய அரசு தனியார்மயமாக்குகிறது. இதுபோன்ற சூழலில் இந்திய ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைப்பது தொடர்பான பேச்சுகள் சமீபத்தில் அதிகரித்து வருகின்றன. அதிக வருவாய் தரும் இந்திய ரயில்வே அமைப்பை தனியாரிடம் கொடுப்பது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் பலர் கூறுகின்றனர்.

ரயில்வே பட்ஜெட்: 400 வந்தே பாரத் ரயில்கள் இயக்கம்!
இந்நிலையில், ரயில்வே தனியார்மயம் குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து இந்திய டுடே பட்ஜெட் வட்டமேசை மாநாடு - 2022 நிகழ்ச்சியில் பேசிய அவர், ரயில்வே துறையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தவே மத்திய அரசு விரும்புவதாகவும், தனியாரிடம் ஒப்படைப்பது என்ற கேள்விக்கே இடமில்லை எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

இதற்கு முன் ரயில்வே துறை அமைச்சராக இருந்த பியூஷ் கோயலும் இந்திய ரயில்வே தனியார்மயமாக்கப்படாது என்று தெரிவித்திருந்தார். ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படாது என்றாலும், ரயில்வே துறையில் தனியார் முதலீடுகள் அதிகமாக ஈர்த்து வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்