ஆப்நகரம்

இப்போ ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்க: 14 நாட்களுக்குள் பணம் செலுத்துங்க

ஐஆர்சிடிசி சேவை மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் உடனடியாக பணம் செலுத்தாமல் 14 நாட்களுக்குள் பணம் செலுத்தும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

TOI Contributor 1 Jun 2017, 9:57 pm
மும்பை : ஐஆர்சிடிசி சேவை மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் உடனடியாக பணம் செலுத்தாமல் 14 நாட்களுக்குள் பணம் செலுத்தும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
Samayam Tamil railways to provide book now pay later option
இப்போ ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்க: 14 நாட்களுக்குள் பணம் செலுத்துங்க


மும்பையை சேர்ந்த பின்டெக் நிறுவனம் ரயில்வேயுடன் இணைந்து ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்வோருக்கு இந்த புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதுகுறித்து ஐஆர்சிடிசி செய்தித் தொடர்பாளர் சந்திப் தத்தா கூறும் போது, " பயணத்திற்கு 5 தினங்கள் முன்னதாக டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம் . பின்னர் அடுத்த 14 நாட்களுக்குள் 3.5 % சேவை வரியுடன் டிக்கெட்டுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் .

இந்த திட்டம் இ-சேவை மூலம் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது, மும்பையை மையமாகக் கொண்ட பின்டெக் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஐ.ஆர்.சி.டி.சி. ஈ பே லேட்டர் (epaylater) என்ற இந்த திட்டத்தை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பயணியின் பெயர், செல்போன் எண், ஈமெயில் முகவரி, பேன் கார்ட் அல்லது ஆதார் விவரங்கள் பெறப்பட்டு டிக்கெட் வழங்கப்பட்டு 14 நாட்களுக்கு பிறகு கட்டணம் வசூலிக்கப்படும்" என்று அவர் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்