ஆப்நகரம்

உர்ஜித் படேலுக்கு ரகுராம் ராஜன் வரவேற்பு

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள உர்ஜித் படேலுக்கு, தற்போதைய ஆளுநர் ரகுராம் ராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

TNN 27 Aug 2016, 1:55 am
ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள உர்ஜித் படேலுக்கு, தற்போதைய ஆளுநர் ரகுராம் ராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil rajan welcomes urjit patel as his successor
உர்ஜித் படேலுக்கு ரகுராம் ராஜன் வரவேற்பு


செப்டம்பர் மாதம் 4ம் தேதியுடன் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து, ரகுராம் ராஜன் விடைபெறுகிறார். அவரை தொடர்ந்து, ரிசர்வ் வங்கியின் 24வது ஆளுநராக, உர்ஜித் படேல் பதவியேற்க உள்ளார். சர்வதேச அளவில் ரகுராம் ராஜனைப் போலவே, பல்வேறு பொருளாதார நிபுணத்துவம் பெற்றுள்ள உர்ஜித் படேலுக்கு, பல்வேறு தரப்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அவருக்கு, ரகுராம் ராஜன் தற்போது வரவேற்பு தெரிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை வகுப்பதில், உர்ஜித் படேல் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். அவர் உள்ளிட்ட குழுவினரின் செயல்பாடுகள் காரணமாக, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் இந்த அளவுக்கு, ரிசர்வ் வங்கி சிறப்பான பங்களிப்பை வழங்க முடிந்தது. எனவே, ரிசர்வ் வங்கியை வரும்காலத்தில் சிறப்பாக, உர்ஜித் படேல் வழிநடத்திச் செல்வார் என்றும் ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்