ஆப்நகரம்

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கட்டாயம் இதைச் செய்ய வேண்டும்!

ரேஷன் கார்டுதாரர்கள் அனைவரும் இந்த அப்டேட்டை செய்யாவிட்டால் அவர்களுக்கு ரேஷன் உதவி கிடைக்காமல் போகும்.

Samayam Tamil 6 Oct 2022, 1:30 pm
ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பிலிருந்து ரேஷன் திட்டத்தின் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுமட்டுமல்லாமல் மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
Samayam Tamil ration card


ரேஷன் கார்டுதாரர்கள் தங்களது ரேஷன் அட்டையில் குடும்ப உறுப்பினர்கள் போன்ற விவரங்களை அப்டேட்டாக வைத்திருப்பது அவசியம். அதை விட முக்கியமானது மொபைல் நம்பர். எனவே உங்களுடைய மொபைல் நம்பர் ஒருவேளை மாறியிருந்தால் உடனடியாக ரேஷன் கார்டில் அப்டேட் செய்யவும். ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண்ணை எப்படி எளிதாக அப்டேட் செய்யலாம் என்று இங்கே பார்க்கவும்.

உங்க PF பணத்துக்கு மிகப் பெரிய ஆபத்து.. உஷாரய்யா உஷாரு!
ரேஷன் கார்டில் மொபைல் எண்ணைப் புதுப்பிப்பது மிகவும் எளிதானது. இதை வீட்டில் இருந்தே மிக எளிதாகச் செய்யலாம்.

1. முதலில் மாநில அரசின் அதிகாரப்பூர்வ ரேஷன் இணைய பக்கத்துக்குச் செல்லவும். https://www.tnpds.gov.in/

2. இப்போது ஒரு பக்கம் திறக்கும். அதில் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் புதுப்பிக்கவும் என்று எழுதப்பட்டிருப்பதைக் காண்பீர்கள்.
3. இதில் உங்கள் தகவலை நிரப்பவும்.
5. முதல் பத்தியில் குடும்பத் தலைவரின் ஆதார் எண்/NFS ஐடியை எழுதவும்.
6. இரண்டாவது பத்தியில் ரேஷன் கார்டு எண்ணை எழுதவும்.
7. மூன்றாவது பத்தியில் குடும்பத் தலைவரின் பெயரை எழுதவும்.
8. கடைசி பத்தியில் உங்கள் புதிய மொபைல் எண்ணை உள்ளிட்டு சேமிக்கவும்.
10. இப்போது உங்கள் மொபைல் எண் புதுப்பிக்கப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்