ஆப்நகரம்

ரேஷன் கார்டு இனி செல்லாது.. அதிரடி ஆக்சனில் இறங்கிய மாநில அரசு!

9 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து!

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 3 Mar 2023, 2:49 pm
தகுதியில்லாதவர்களின் ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டு வருகின்றன. உங்களுடைய ரேஷன் கார்டும் நீக்கப்படலாம்.
Samayam Tamil ration cards of ineligible people are being cancelled
ரேஷன் கார்டு இனி செல்லாது.. அதிரடி ஆக்சனில் இறங்கிய மாநில அரசு!


ரேஷன் கார்டு!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு ரேஷன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அரசின் ரேஷன் உதவிகள் கிடைக்கும். ரேஷன் உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் இதன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

9 லட்சம் கார்டுகள் ரத்து!

நீங்களும் அரசின் இலவச ரேஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரேஷன் வாங்குபவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தகுதியற்ற ரேஷன் கார்டுதாரர்களுக்கு எதிராக அரசு சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் கீழ் ஹரியானா அரசு கடந்த காலங்களில் 9 லட்சம் ரேஷன் கார்டுகளை ரத்து செய்துள்ளது.

அரசு ஊழியகர்களின் கார்டு!

இதுகுறித்து அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தகவல் தெரிவித்துள்ளார். அதே சமயம் 12 லட்சம் புதிய ரேஷன் கார்டுகளும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்ட மக்களில், 3 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் ஆவர். அதேபோல, சுமார் 80,000 பேர் அரசு ஊழியர்கள்.

80 கோடி மக்கள் பயன்!

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு இலவச ரேஷன் வழங்கப்படுகிறது. இது தவிர, பல மாநில அரசுகளும் ஏழைகளுக்கு ரேஷன் வழங்கி வருகின்றன.

கார்டுகள் ரத்து!

ரேஷன் வழங்க, ரேஷன் கார்டுதாரர்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். தகுதியில்லாதவர்கள் கூட இலவச ரேஷனைப் பயன்படுத்திக் கொள்வதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், அரசு தகுதியற்றவர்களின் கார்டுகளை நீக்கத் தொடங்கியுள்ளது. மேலும் அவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டும் வருகின்றன.

எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்