ஆப்நகரம்

இனி ரேஷன் கடைதான் பேங்க்.. இதெல்லாம் புதுசா வரப்போகுது!

ரேஷன் கடைகளில் வங்கி சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கு கேரள அரசு பரிசீலனை.

Samayam Tamil 18 Apr 2022, 7:01 pm
ரேஷன் கடைகளில் வங்கி சேவைகள் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இதன்படி கேரள மாநிலத்தில் முதற்கட்டமாக ரேஷன் கடைகளில் கூடுதல் சேவைகள் மே மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.
Samayam Tamil kerala ration card


கேரளத்தில் சுமார் 14000 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் சுமார் 800 ரேஷன் கடைகளில் கூடுதல் இட வசதி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரேஷன் கடைகளின் உரிமையாளர்கள் பொதுமக்களுக்கு கூடுதல் சேவைகளை வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கேரள அரசும் பரிசீலித்து வருகிறது. ரேஷன் கடைகளில் வங்கி சார்ந்த சேவைகளை வழங்குவதற்கே திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கூட்டணி அமைப்பதற்கு நான்கு வங்கிகளும் விருப்பம் தெரிவித்துள்ளன. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் ரேஷன் கடைகளிலேயே வங்கி சேவைகளை பெறலாம்.

உணவு பொருட்கள் விலை உயர்வு.. பணவீக்கத்தால் படு டென்ஷன்!
இதற்காக ரேஷன் கார்டுகளில் ஏடிஎம் கார்டுகளில் உள்ளது போன்ற சிப் பொருத்தப்பட வேண்டும். ரேஷன் கடைகளில் வங்கி சேவைகள் போக மின் கட்டணம் உள்ளிட்ட பில் கட்டணங்களை செலுத்தும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

முதற்கட்டமாக இந்த சேவைகள் இந்த ஆண்டிலேயே 1000 ரேஷன் கடைகளில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதனால் கிராமப்புற மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோக பழங்குடி மக்கள் பயனடையும் வகையில் கூடுதலான பழங்குடி கிராமங்களில் நடமாடும் மொபைல் ரேஷன் கடைகளை அறிமுகப்படுத்த கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்