ஆப்நகரம்

Reymond: வேலையும் இல்லை சம்பளமும் இல்லை!

நூற்றுக்கணக்கானோரை வேலையை விட்டு நீக்கியுள்ள ரேமண்ட் நிறுவனம், சிலருக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

Samayam Tamil 25 May 2020, 5:00 pm
இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாகவே கொரோனா பீதியால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முடங்கிக் கிடந்த தொழில் துறை தற்போதுதான் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. நிறுவனங்களில் சரீர இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கடுமையாக உள்ளன. நிறுவனங்களுக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தில் ஆள் குறைப்பு, சம்பளக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு துறையிலும் நிறுவனங்கள் ஒவ்வொன்றாக பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது ரேமண்ட் நிறுவனமும் இணைந்துள்ளது.
Samayam Tamil reymond


இந்தியாவின் மிகப் பெரிய டெக்ஸ்டைல் நிறுவனமான ரேமண்ட், தனது நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. கொரோனா பாதிப்பு முன்னரே இந்நிறுவனம் வருவாய் இழப்பைச் சந்தித்து வந்துள்ளது. போதிய வருமானம் இல்லாமல் நிதி நெருக்கடி ஏற்பட்டு இக்கட்டான சூழலில் இயங்கிக் கொண்டிருந்த சமயத்தில் கொரோனா பாதிப்பு அந்நிறுவனத்தை மேலும் வீழ்ச்சியடையச் செய்துள்ளது. இதன் காரணமாக வேறு வழியின்றி பணிநீக்கத்தைக் கையில் எடுத்துள்ளது ரேமண்ட் நிறுவனம். இதுமட்டுமல்லாமல் பணிநீக்கம் செய்த ஊழியர்கள் பலருக்கு அவர்கள் வேலை செய்த சம்பளத்தைக் கூடக் கொடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வேலையில்லாததால் போர்ச்சுகீஸுக்கு போறோம்... வினாத்தாள் விவகாரத்தில் சிக்கிய ஊழியர்கள்!

சமீபத்தில் இந்தியாபுல்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 2000 பேரைப் பணிநீக்கம் செய்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து தற்போது ரேமண்ட் நிறுவனத்தின் பணிநீக்கம் பேசு பொருளாகியுள்ளது. இவ்விரண்டு நிறுவனங்கள் மட்டுமல்ல, ஐடி துறையிலும் நிறுவனங்கள் பல பணிநீக்க அறிவிப்பைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. ஓலா, ஜொமாட்டோ , ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் பணிநீக்கம் செய்துள்ளன. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு நிலையில் பணிநீக்கங்களும் அதிகரித்து வருவதால் ஊழியர்களிடையே எதிர்காலம் குறித்த அச்சம் நிலவுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்