ஆப்நகரம்

இந்தியாவில் பிட் காயினுக்கு தடை!

இந்தியாவில் பிட் காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரண்சிகளுக்கு தடை விதித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 7 Apr 2018, 3:54 pm
இந்தியாவில் பிட் காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரண்சிகளுக்கு தடை விதித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Samayam Tamil bit coin


விர்ச்சுவல் கரண்சி எனப்படும பிட் காயின் புழக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்த முறையில் பணம் யாரால் யாருக்கு கொடுக்கப்படுகிறது என்பது கண்டுபிடிக்க முடியாது. மேலும், இது போன்ற கிரிப்டோ கரண்சியின் புழக்கத்தால்,10 சதவீத விலை வீழ்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான முதல் கொள்கையில், பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரண்சி வணிகத்தில் ஈடுபடும் அமைப்புகளோடு நிதிநிறுவனங்கள் எந்த உறவும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மேலும், இது போன்ற கிரப்டோ கரண்சி வைத்திருப்பவர்கள், மூன்று மாதத்திற்குள் பணமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பிட் காயினை தடை செய்வது குறித்து மத்திய அரசு பல முறை ஆலோசனை நடத்தி எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்