ஆப்நகரம்

இந்த பேங்க் இனி இயங்காது.. ரிசர்வ் வங்கி உத்தரவால் வாடிக்கையாளர்கள் ஷாக்!

லக்ஷ்மி கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்து, வங்கி தொழிலை நடத்த தடை விதித்துள்ள ரிசர்வ் வங்கி.

Samayam Tamil 26 Sep 2022, 3:17 pm
நிதிநிலை சரியில்லாத வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த வரிசையில், மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த லக்ஷ்மி கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil cash


மகாராஷ்டிர மாநில சோலாப்பூரில் இயங்கி வரும் லக்ஷ்மி கூட்டுறவு வங்கியிடம் போதிய மூலதனம் இல்லை. மேலும் இந்நிறுவனம் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளும் இல்லை. எனவே, லக்ஷ்மி கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

லக்ஷ்மி கூட்டுறவு வங்கியின் 99% வாடிக்கையாளர்களுக்கு முழு டெபாசிட் தொகையும் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கடன் உத்தரவாத நிறுவனத்திடம் (DICGC) இருந்து வழங்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளது.

மீண்டும் மீண்டுமா.. இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு!
லக்ஷ்மி கூட்டுறவு வங்கியிடம் போதிய மூலதனமும், வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளும் இல்லை எனவும், செப்டம்பர் 22ஆம் தேதி முதல் லக்ஷ்மி கூட்டுறவு வங்கி வங்கி தொழில் செய்வதை நிறுத்த வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949 விதிகளுக்கு லக்ஷ்மி கூட்டுறவு வங்கி இணங்கவில்லை எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. லக்ஷ்மி கூட்டுறவு வங்கியை தொடர்ந்து செயல்பட அனுமதித்தால் அது வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ஆபத்து என்பதையும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்