ஆப்நகரம்

இன்று வெளியாகிறது ரிசர்வ் வங்கியின் இடைக்கால நிதியறிக்கை!

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று ரிசர்வ் வங்கியின் இடைக்கால நிதியறிக்கை வெளியாகிறது. அதில், வட்டிவிகிதம் ஏதேனும் குறைக்கப்படுமா என பல தரப்பிலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

TNN 8 Feb 2017, 8:31 am
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று ரிசர்வ் வங்கியின் இடைக்கால நிதியறிக்கை வெளியாகிறது. அதில், வட்டிவிகிதம் ஏதேனும் குறைக்கப்படுமா என பல தரப்பிலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Samayam Tamil rbi expected to cut interest rate to 6 year low today
இன்று வெளியாகிறது ரிசர்வ் வங்கியின் இடைக்கால நிதியறிக்கை!


மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கடுத்தப்படியாக, ஜிஎஸ்டி மசோதாவை அமல்படுத்தும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சூழலில், ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை அறிக்கை இன்று வெளியாகிறது.

இதில், வட்டிவிகிதம் ஏதேனும் குறைக்கப்படுமா என, தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள், வங்கிகளின் உள்ளிட்ட பல தரப்பிலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை, 0.25% வரை வங்கிகளுக்கான குறுகிய கால வட்டிவிகிதம் குறைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஒருவேளை வட்டிவிகிதம் குறைக்கப்படும்பட்சத்தில், ரெப்போ விகிதம் 6 சதவீதமாகக் குறையும். இது கடந்த 2010ம் ஆண்டுக்குப் பின்னர் நிர்ணயிக்கப்பட்ட மிகக் குறைந்தபட்ச ரெப்போ ரேட் என்ற விகிதத்தை எட்டும் என்றும் பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

நாட்டின் பொருளாதாரம் எதிர்பார்த்தபடியே உள்ளது என, மத்திய அரசு கூறியுள்ளதால், ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை அறிக்கையில் கடுமையான அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

RBI Expected To Cut Interest Rate To 6-Year Low Today: If RBI cuts its repo rate by 25 basis points to 6 per cent, it will be the lowest since November 2010.

அடுத்த செய்தி

டிரெண்டிங்