ஆப்நகரம்

Credit Card Rules: கிரெடிட் கார்டு ரூல்ஸ் மாற்றம்.. ரிசர்வ் பேங்க் உத்தரவு!

கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகளை (Credit card rules) அக்டோபர் 1ஆம் தேதிக்குள் அமல்படுத்தும்படி காலக்கெடுவை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது.

Samayam Tamil 22 Jun 2022, 12:39 pm
கிரெடிட் கார்டுகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை ஏற்கெனவே அறிவித்தது. இந்த விதிமுறைகளை ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. ஆனால், கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
Samayam Tamil credit cards


இந்த கோரிக்கையை ஏற்று கிரெடிட் கார்டு விதிமுறைகளை அக்டோபர் 1ஆம் தேதிக்குள் அமல்படுத்தும்படி கடைசி தேதியை நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் உள்ளன?

புதிய விதிமுறைப்படி, ஒரு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட கிரெடிட் கார்டை 30 நாட்களில் அவர் ஆக்டிவேட் செய்யவில்லை எனில் அதன்பிறகு ஆக்டிவேட் செய்ய OTP பாஸ்வோர்ட் கட்டாயம். கார்டை ஆக்டிவேட் செய்வதற்கு வாடிக்கையாளர் ஒப்புதல் தராவிட்டால் ஏழு நாட்களுக்குள் எந்தவொரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் கார்டை முடக்கிவிடவேண்டும்.

சீனியர் சிட்டிசன்களுக்கு சூப்பர் திட்டம்.. மாதம் தோறும் வருமானம் கிடைக்கும்!
கிரெடிட் கார்டில் கார்டு லிமிட்டை (Card limit) உயர்த்துவதற்கு முன் ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல் கார்டு லிமிட் உயர்த்தப்படாமல் இருப்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

கிரெடிட் கார்டு நிலுவைத்தொகை திருப்பிச் செலுத்துவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை குறிப்பிட வேண்டும். செலுத்தப்படாத கட்டணங்கள், வரித் தொகையை வைத்து கூடுதல் கட்டணம், கூட்டு வட்டி வசூலிக்க பயன்படுத்தக்கூடாது.

இந்த விதிமுறைகளை அமல்படுத்துவதற்கு மட்டும் அக்டோபர் 1ஆம் தேதி வரை கால அவகாம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்