ஆப்நகரம்

கூட்டுறவு வங்கிகள் இனி இதெல்லாம் செய்யலாம்.. ரிசர்வ் பேங்க் அனுமதி!

கூட்டுறவு வங்கிகளுக்கு சில முக்கிய அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 8 Jun 2022, 12:49 pm
ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் ஜூன் 6ஆம் தேதி தொடங்கி இன்று முடிவடைந்தது. இந்நிலையில், கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் இன்று வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil RBI


அதில் முக்கியமாக, ரெப்போ வட்டி விகிதம் 0.50% உயர்த்தப்பட்டு 4.90% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கிகளில் கடன் பெற்று EMI செலுத்தி வருவோருக்கு கட்டணம் மேலும் அதிகரிக்கும்.

இதுபோக, யூபிஐ பரிவர்த்தனைகளில் கிரெடிட் கார்டுகளை இணைப்பதற்கும் ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இதனால் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

UPI: யூபிஐ பரிவர்த்தனையில் கிரெடிட் கார்டு.. ரிசர்வ் வங்கி கிரீன் சிக்னல்!
மேலும், கூட்டுறவு வங்கிகளுக்கும் சில முக்கிய அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதைப் பற்றி பார்க்கலாம்.

  • நகர்ப்புற மற்றும் ஊரக கூட்டுறவு வங்கிகளில் தனிநபர்களுக்கு வீட்டுக் கடன் வழங்குவதற்கான வரம்பு 100% மேல் உயர்த்தப்பட்டுள்ளது.

  • ஊரக கூட்டுறவு வங்கிகள் தங்கள் மொத்த சொத்துகளில் 5% தொகையை வீடமைப்பு திட்டங்களுக்கு வழங்க பயன்படுத்திக்கொள்ளலாம்.

  • நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே நேரடி வங்கி சேவைகளை (Doorstep banking services) வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்