ஆப்நகரம்

2000 ரூபாய் நோட்டை யாருமே பயன்படுத்துவதில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர்

2000 ரூபாய் நோட்டுகள் பொதுவாக பயன்படுத்தப்படுவதில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் தெரிவித்துள்ளார்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 24 May 2023, 4:54 pm
2000 ரூபாய் நோட்டுகள் பொதுவாக பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படுவதில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil shaktikanta das
shaktikanta das


2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக மே 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

எனினும், 2000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு நீக்கம் செய்யப்படவில்லை எனவும், 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து பொருட்கள் அல்லது சேவைகளை வாங்கலாம் எனவும் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் பயன்படுத்தப்படவில்லை என கண்டறிந்ததாகவும், அதன்பிறகே 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் தெரிவித்துள்ளார்.

தொழில்துறை கூட்டமைப்பான சிஐஐ (CII) நடத்திய ஆண்டுக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் பங்கேற்று பேசினார். அப்போது அவர், “2000 ரூபாய் நோட்டுகள் பரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்படுவதே இல்லை. 2000 ரூபாய் நோட்டுகள் பொதுவாகவே பயன்படுத்தப்படுவதில்லை என ஆய்வுகள் மூலம் தெரிந்துகொண்டோம்.

பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு நீக்கம் செய்யப்பட்டபோது புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பை அதிகரிக்கவே 2000 ரூபாய் நோட்டுகள் கொண்டுவரப்பட்டன. இப்போது 2000 ரூபாய் நோட்டுகளின் தேவை பூர்த்தி அடைந்துவிட்டது.

2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் நடவடிக்கையால் எந்த இடையூறும் ஏற்படாது. செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கால அவகாசம் இல்லை எனில் பயன் இருக்காது. இதனால் எந்த பிரச்சினையும் இல்லை. 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற நேரம் வந்தாகிவிட்டது. அதிக மதிப்பு கொண்ட நோட்டுகள் அங்கும் இங்குமாக இருந்தால் சிக்கல்கள் ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்