ஆப்நகரம்

ரெபோ வட்டி விகிதம் உயர்வு: மோடி ஆட்சியில் முதல் முறை

ரிசர்வ் வங்கி 4.5 ஆண்டுகளுக்குப் பின் ரெபோ வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தியுள்ளது.

Samayam Tamil 6 Jun 2018, 5:25 pm
ரிசர்வ் வங்கி 4.5 ஆண்டுகளுக்குப் பின் ரெபோ வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தியுள்ளது.
Samayam Tamil urjit-patel-650_650x400_81481071916


நிதிக் கொள்கை குழுவின் ஒப்புதலைத் தொடர்ந்து ரெபோ வட்டி விகிதம் 6.50% ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 4.5 ஆண்டுகளுக்குப் பின் 0.25% உயர்த்தப்படுகிறது. இதற்கு முன் கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரியில்தான் உயர்த்தப்பட்டது.

ரிவர்ஸ் ரெபோ வட்டி விகிதமும் 0.25 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 6% ஆக உயர்ந்துள்ளது. இது குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் புதன்கிழமை (இன்று) வெளியிட்டார். நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் பணவீக்க விகிதம் 4.8% முதல் 4.9% ஆக இருக்கும் என்றும் 2017-18ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7% ஆக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
ரெபோ வட்டி விகிதம் உயர்வினால் வங்கிகளும் கடன்கள் மீதான வட்டியை உயர்த்த வாய்ப்பு உள்ளது. இதனால், வீட்டுக்கடன் மற்றும் வாகனக்கடன் பெறுபவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு முதன் முறையாக ரெபோ வட்டி விகிதம் உயர்த்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்